தீபாவளி வாழ்த்து... புதுச்சேரி டிஜிபி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள்..!
புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் டிஜிபி காலில் விழுந்து தீபாவளி வாழ்த்து பெற்றது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஜான் குமார். காங்கிரஸில் நாராயணசாமிக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்ட இவர் கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து இப்போது எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

இவரது மகன் விவிலியன் ரிச்சர்டு புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அப்பாவும் மகனும் பாஜக எம்.எல்.ஏ.க்களாக உள்ள நிலையில், அவர்கள் இருவரும் தீபாவளி வாழ்த்துபெற வேண்டி அம்மாநில டிஜிபி ரன்வீர் சிங்கை சந்தித்தனர்.
அப்போது டிஜிபிக்கு இனிப்புகள் வழங்கிய விவிலியன் ரிச்சர்டு எம்.எல்.ஏ. பழக்க தோஷத்தில் டிஜிபியின் காலில் தடாலென விழுந்தார். இதைப்பார்த்த அவரது தந்தையும் காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜான்குமாரும் டிஜிபி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் போலீஸ் அதிகாரி காலில் விழுந்து வாழ்த்துப்பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் -பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கையெடுத்து கும்பிடுவதும் காலில் விழுந்து ஓட்டுக் கேட்பதும் அரசியல்வாதிகளுக்கே உரிய பழக்க தோஷம் என்றும் அந்த பழக்க தோஷத்தின் காரணமாகவே தந்தையும், மகனும் எம்.எல்.ஏ. என்ற பதவியை கூட மறந்து போலீஸ் அதிகாரி காலில் விழுந்து வாழ்த்துப் பெற்றுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதனிடையே பண்டிகை நாட்களில் வயதில் மூத்தவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவது வழக்கமான ஒன்று என்றும் இதில் பதவியை பார்க்கக் கூடாது எனவும் ஜான்குமார் தரப்பு பதிலடி கொடுத்து வருகிறது.
-
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை!












Click it and Unblock the Notifications