மெர்சல் டூ மாஸ்டர் வரை கொஞ்ச நஞ்ச பேச்சா?.. பீஸ்ட் போஸ்டரில் வச்சு செய்யும் ரசிகர்கள்.. பாஜக ஷாக்
புதுச்சேரி: விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வரும் 13-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் புதுச்சேரி முழுவதும் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் முதலமைச்சர் ரங்கசாமியுடன் விஜய் சந்தித்த புகைப்படம் இடம் பிடித்துள்ளது.
Recommended Video
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அண்மையில் நடிகர் விஜய்யை பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். இது புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருவரும் 1 மணி நேரம் பேசிக் கொண்டதாகவும் தெரிகிறது. இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் புஸ்ஸி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆனந்த். தமிழகத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிட்டவர்களில் கணிசமான இடங்களில் வென்றுள்ளனர்.

பீஸ்ட் படம்
இந்த நிலையில் வரும் 13ஆம் தேதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது. இதனை கொண்டாடும் விதமாக புதுவை ரசிகர்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரமாண்ட கட் அவுட் மற்றும் பேனர்கள் அமைத்து உள்ளார்கள்.

முதல்வர் ரங்கசாமியின் படம்
பெரும்பாலான பேனர்களில் சமீபத்தில் முதல்வர் ரங்கசாமி விஜய்யை சந்தித்த படம் இடம் பெற்றிருக்கிறது. புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள நிலையில் நடிகர் விஜயுடன் முதலமைச்சர் ரங்கசாமி படம் இடம்பெற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ரூ 100 கட்டணம் உயர்வு
மேலும் 13ஆம் தேதி விஜய் நடித்த பீஸ்ட் படம் வெளியாக உள்ள நிலையில் புதுச்சேரியில் உள்ள தியேட்டர்களில் வருகின்ற 13ஆம் தேதி முதல் 17ம் தேதி வரை தியேட்டர்களில் உள்ள அனைத்து நிலைகளில் உள்ள டிக்கெட்டுகளுக்கும் தலா 100 ரூபாய் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விரைவில் உள்ளாட்சி தேர்தல்
புதுவையில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரும் நிலையில் தமிழக- புதுவை எல்லையில் உள்ள விஜய் ரசிகர்களின் ஆதரவை பெறுவதற்காகவே முதல்வர் ரங்கசாமி விஜய்யை சந்தித்தாக கூறப்படுகிறது. இவர்களின் சந்திப்புக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த போஸ்டர் மூலம் வரும் உள்ளாட்சி தேர்தலில் முதல்வர் ரங்கசாமியின் என் ஆர் காங்கிரஸுக்கே தங்களது ஆதரவு என விஜய் ரசிகர்கள் மறைமுகமாக சொல்வது போல் உள்ளது. சட்டசபை தேர்தலில் என் ஆர் காங்கிரஸுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டாகிவிட்டது.

மெர்சல் டூ மாஸ்டர்
பல்வேறு பிரச்சினைகளால் என் ஆர் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே சுமுக நிலை இல்லாத நிலையில் உள்ளாட்சி தேர்தலில் என் ஆர் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க முடியாத சூழல் எழுந்துள்ளதால் இந்த போஸ்டரை பார்த்த பாஜக, அதிர்ச்சி அடைந்துள்ளது. விஜயின் மெர்சல் படத்துக்கான எதிர்ப்பு, எச் ராஜாவின் ஜோசப் விஜய் சர்ச்சை, வருமான வரித் துறை ரெய்டு உள்ளிட்டவைகளால் பாஜகவினருக்கும் விஜய் ரசிகர்களுக்கும் ஏழாம் பொருத்தம் என்பது நினைவுக்கூரத்தக்கது.












Click it and Unblock the Notifications