ஒரு சீட் கன்ஃபார்ம்.. புதுச்சேரியில் போட்டியிடும் பாஜக.. ‘ஓகே' சொன்ன ரங்கசாமி.. ஆனா ஒரு விஷயம்!
புதுச்சேரி: வரும் லோக்சபா தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் கூட்டணி சார்பாக பாஜக போட்டியிட, என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் வெகுசில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணி ஆற்றி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு ஆலோசனைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்துள்ளதால் புதிய அணியை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது பாஜக.

அதேபோல, புதுச்சேரியில் உள்ள ஒரே ஒரு லோக்சபா தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுன் இணைந்து தேர்தலைச் சந்திக்க உள்ளது பாஜக. புதுச்சேரி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. என்ஆர் காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமியுடன், பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தலைமையில் பாஜக தலைவர் செல்வ கணபதி உள்ளிட்டோர் இன்று பேச்சுவாத்தையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி தொகுதியில் பாஜக போட்டியிட என்ஆர் காங்கிரஸ் தலைவரும் புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க பாஜக நிர்வாகிகள் கோரியதை அடுத்து முதலமைச்சர் ரங்கசாமி அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம், புதுச்சேரி லோக்சபா தொகுதியில் புதுச்சேரி மக்களுக்கு நன்கு அறிமுகமான நபர் ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று பாஜக குழுவினரிடம் முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தி உள்ளதாகவும், அதற்கு பாஜக தலைவர்கள் உறுதி தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை பாஜக தீவிரப்படுத்தாத நிலையில், முதல் தொகுதியாக புதுச்சேரியில் பாஜக சீட் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கப்போகும் வேட்பாளர் பெயர் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications