தூய்மை பணியாளர்களுக்கு அரிசி பிஸ்கெட் வழங்கி காலில் விழுந்து நன்றி தெரிவித்த பாஜகவினர்!
புதுச்சேரி: தூய்மை பணியாளர்களுக்கு அரிசி பிஸ்கெட் மற்றும் முககவசம் வழங்கி அவர்களின் காலில் விழுந்து உப்பளம் பகுதியில் பாஜகவினர் நன்றி தெரிவித்தனர்.
புதுச்சேரி மாநிலத்தில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். மேலும் 4 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர்.

தற்போது 3 பேர் மட்டுமே இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜிப்மர் மருத்துவமனையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் , பொதுமக்கள் வீட்டில் முடங்கி இருக்கும் காலகட்டத்தில் தங்களைப்பற்றி கவலை கொள்ளாமல் இந்த தேசத்திற்காகவும் பொது மக்களின் சுகாதாரத்திற்காகவும் சுகாதாதாரத்துறை பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறார்கள்.

அப்படி உப்பளம் தொகுதியில் பணி செய்து வரும் 70-தூய்மை பணியாளர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் உப்பளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கோபி என்ற சிவராஜ் தலைமையில் பாஜகவினர் அரிசி ,காய்கறிகள், பிஸ்கட் மற்றும் முக கவசம் வழங்கினார்கள் மேலும் அவர்களில் காலில் விழுந்து நன்றி தெரிவத்தனர்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்?












Click it and Unblock the Notifications