பாஜக கூட்டணியில் தவெக இணையுமா? ஆர்வமாக கேட்ட பாஜக நிர்வாகிகள்.. பிஎல் சந்தோஷ் கொடுத்த பதில்!
புதுச்சேரி: பாஜக கூட்டணியில் தவெக இணையாது என்று அக்கட்சியின் தேசிய அமைப்புச் செயலாளர் பிஎல் சந்தோஷ் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக - அதிமுக ஆகிய கட்சிகள் மட்டும் இணைந்து தேர்தலை சந்திக்கும் என்று கூறியதோடு, தவெக கூட்டணிக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் தேர்தல் பணிகளை செய்ய வேண்டாம் என்றும் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ளன. அதே நேரத்தில் புதுச்சேரியிலும் தேர்தல் நடக்கவுள்ளது. புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக இரு தரப்புக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது.

பாஜக சார்பாக அமைச்சரவையில் இடம்பெற்ற சிலர் மாற்றப்பட்டிருந்தனர். இதன்பின் பாஜக மேலிடம் ரங்கசாமியை சந்தித்து சமாதானம் செய்த நிலையில், சூழல் மீண்டும் சீராகியது. இருப்பினும் பாஜக உடனான கூட்டணியில் இருந்து என்ஆர் காங்கிரஸ் வெளியேறும் என்ற பேச்சுகள் தொடர்ச்சியாக அடிபடுகின்றன. ஏனென்றால் முதல்வர் ரங்கசாமி தவெகவுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.
இதனால் பாஜகவினர் பலரும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் சட்டசபைத் தேர்தல் ஆலோசனைக்காக தேசிய அமைப்புச் செயலாளர் பிஎல் சந்தோஷ் புதுச்சேரி வந்தார். இதன்பின் சட்டசபைத் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பிஎல் சந்தோஷ் தலைமையில் முக்கிய பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது பிஎல் சந்தோஷிடம் சில பாஜக நிர்வாகிகள் நேரடியாக தவெக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருக்கிறதா? என்ஆர் காங்கிரஸ் - தவெக கூட்டணி அமையுமா என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த பிஎல் சந்தோஷ், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள என்ஆர் காங்கிரஸ் - பாஜக - அதிமுக மட்டுமே கூட்டணியாக இணைந்து சட்டசபைத் தேர்தலை சந்திக்கும்.
தவெக கூட்டணியில் இணைய வாய்ப்புகள் இல்லை. தவெக கூட்டணிக்கு வரும் என்ற நோக்கில் பாஜகவினர் தேர்தல் பணிகளை செய்ய வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் பிறந்தநாளன்று முதல்வர் ரங்கசாமி நேரடியாக அவரது வீட்டிற்கே சென்று பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
புதுச்சேரியில் தவெக கட்டமைப்பு ரீதியாகவும் வலுப்பெற்று வரும் நிலையில், வரும் சட்டசபைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் தவெகவுடன் கூட்டணி இல்லை என்று பிஎல் சந்தோஷ் சொல்லி இருப்பதன் மூலமாக, தமிழ்நாட்டிலும் அதிமுக - பாஜக கூட்டணியில் தவெக இணைய வாய்ப்பில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
-
மின் தடை பரிதாபங்கள்.. சென்னைல மட்டும் தங்கத்தில் பியூஸ் கேரியர் இருக்குமோ.. தெறிக்கும் மீம்ஸ்! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications