ஜிப்மர் மருத்துவமனையில் செல்போன் திருடியவர் கைது.. 3 காஸ்ட்லி செல்போன்கள் பறிமுதல்
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளி போல் நடித்து செல்போன் திருடிய விழுப்புரத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவனிடமிருந்து நோயளிகளிடமிருந்து திருடப்பட்ட 3 விலை உயர்ந்த செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன்(49). இவர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்க்க இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது பார்வையாளர் அறையில் அமர்ந்திருந்த கிருஷ்ணனின் விலையுயர்ந்த செல்போன் திருடுபோனது. இதுதொடர்பாக அவர் தன்வந்திரி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தன்வந்திரி நகர் காவல்நிலை போலீசார், உடனடியாக ஜிப்மர் மருத்துவமனை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து திருட்டு சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு சென்ற ரோந்து போலீசார், நோயாளிகள் தங்கும் அறை அருகே சந்தேகபடும்படியாக சுற்றிதிரிந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த முகமது இர்பான்(29) என்பதும், கடந்த பல மாதங்களாக ஜிப்மர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் நோயாளிபோல் நடித்து செல்போன்களை திருடி வந்ததாக ஒப்புகொண்டார்.

இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவனிடமிருந்து மருத்துவமனையில் திருடப்பட்ட 3 விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications