கொரோனா எதிரொலி.. புதுச்சேரியில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை.. நாராயணசாமி அதிரடி!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்திற்கு நாளை முதல் வருகின்ற 31 ஆம் தேதி வரை வெளிமாநில வாகனங்கள் வருவதற்கு தடை விதித்து முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே போகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு, 144 தடை உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஒன் இந்தியா தமிழுக்கு புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி அளித்த பிரத்தியேக பேட்டியில், கொரோனா வைரஸ் அறிகுறி இந்தியாவில் தென்பட்டதிலிருந்து மத்திய அரசு புதுச்சேரி அரசை தொடர்புகொண்டு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

புதுச்சேரி அரசும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. வருகின்ற 31 ஆம் தேதி வரை புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், சுற்றுலா தலங்களும் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டுமென அறிவுறுத்தப்படுகின்றனர். அதேபோல் புதுச்சேரி மாநிலத்திற்கு நாளை முதல் வருகின்ற 31 வரை வெளிமாநில வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு மட்டும் விளக்கு அளிக்கப்படுகிறது. கொரோனாவின் தீவிரத்தை பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications