தமிழகத்தில் குழந்தை இறப்பு சதவீதம் குறைவு... அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
புதுக்கோட்டை: இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குழந்தைகள் இறப்பு விகிதம் மிகவும் குறைவு என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு சிறப்பு சிகிச்சை முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வயிற்றுப்போக்கினால் 13% இறப்பு ஏற்படுகிறது, இதனை தடுப்பதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இன்று முதல் 2 வாரங்களுக்கு தமிழக அரசு சார்பில் வயிற்றுப்போக்கு சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
தேசிய அளவில் தமிழகத்தில் தான் குழந்தைகள் இறப்பு சதவீதம் குறைவாக இருப்பதாகவும், இதனை மேலும் குறைப்பதற்கான முயற்சிகளில் அரசு தீவிரம் காட்டி வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
முன்னதாக, புதுக்கோட்டை வடசேரிப்பட்டியில் பிடாரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். போட்டியில் 600 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications