புதுச்சேரியில் மேகவெடிப்பு அபாயம்! தயார் நிலையில் இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
புதுச்சேரி: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக நேற்று சென்னையில் மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்திருக்கிறது. இந்நிலையில் இன்று இரவு புதுச்சேரியில் மேகவெடிப்பு அபாயம் ஏற்பட இருப்பதாக எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
நேற்றிரவு சென்னையில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல இடங்களில் ஒரு மணிநேரத்திற்குள் 100 மி.மீக்கும் அதிமாக மழை பெய்திருக்கிறது. அதேபோல புதுச்சேரியிலும் இன்றிரவு மழை பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோக்துங்கன் வெளியிட்டிரும் அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது,

"சென்னையில் நேற்று இரவு நிகழ்ந்த மேகவெடிப்பு நிகழ்வைக் கருத்தில் கொண்டு, அனைத்து ESF/துறை சார்ந்த அலுவலகங்களும் உடனடியாகத் தங்களது கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் அவசரகாலத் திட்டங்களைத் தயார் நிலையில் வைக்க வேண்டும். சென்னை வானிலை மையம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. எனினும், மேகவெடிப்பு நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்க முடியாததாலும், அவை நிகழ்ந்த பிறகே கண்டறியப்படுவதாலும், அதிகபட்ச எச்சரிக்கை அவசியம். வட இந்தியப் பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்களால் கடந்த காலத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
புதுச்சேரிக்கு சென்னை புவியியல் ரீதியாக மிக அருகில் இருப்பதைக் கருத்தில்கொண்டு, அனைத்து ESF துறைகளும் - குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித் துறை, மின்சார வாரியம் மற்றும் காவல் துறை - உயர் எச்சரிக்கை நிலையில் இருந்து, எந்தவொரு எதிர்பாராத நிகழ்வுக்கும் உடனடியாக பதிலளிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
பின்வரும் ஆயத்த நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறு துறைகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன:
i. தேங்கியுள்ள நீரை வெளியேற்ற, பொதுப்பணித் துறை பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மோட்டார் பம்புகளைத் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
ii. தகவல் மற்றும் விளம்பரத் துறை மூலம் பொதுமக்கள் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் (மரங்கள்/மின்கம்பங்கள்/பழைய கட்டிடங்களின் கீழ் நிற்பதைத் தவிர்க்கவும், ஆற்றங்கரைகள்/ஏரிகள் அருகே செல்வதைத் தவிர்க்கவும், வீடுகளை விட்டு வெளியேறும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது).
iii. அவசரகால நிகழ்வுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வசதிகளைத் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
iv. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் முழுமையாகத் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
v. எந்தவொரு அவசர நிலையிலும் போக்குவரத்து மேலாண்மை மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த காவல் துறை தயார் நிலையில் இருக்க வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம்












Click it and Unblock the Notifications