காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம்.. புதுச்சேரி தலைவராக வைத்திலிங்கம் எம்பி நியமனம்.. யார் இவர்?
புதுச்சேரி: நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் மேலிடம் மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை நியமனம் செய்துள்ளது. மேலும் மாநிலங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்பி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி வெற்றி பெறும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. இதற்காக பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை கூட்டணியில் இணைக்க காங்கிரஸ் உழைத்து வருகிறது.
அதோடு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சியில் புதிதாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி சரியாக செயல்படாத நிர்வாகிகளுக்கு பதில் புதியவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் நேற்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே ஒப்புதலோடு கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்பி நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஏவி சுப்பிரமணியன் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் வைத்திலிங்கம் எம்பி புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வைத்திலிங்கம் காங்கிரஸ் கட்சியுடன் 50 ஆண்டு பந்தம் கொண்டுள்ளார். இவர் 8 முறை எம்எல்ஏவாக வென்று பொதுப்பணித்துறை, தொழில்துறை அமைச்சராக செயல்பட்டுள்ளார். அதோடு புதுச்சேரி முதல்வராக 2 முறை பதவி வகித்துள்ளார். 1991 முதல் 1996 வரையும், 2008 முதல் 2011 வரை என 2 முறை வைத்திலிங்கம் முதல்வராக செயல்பட்ட நிலையில் தற்போது எம்பியாக உள்ளார்.
இவர் தவிர குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக சக்திசிங் கோகிலும், மகாராஷ்டிரா தலைவர் மும்பை காங்கிரஸ் தலைவராக வர்ஷா கெய்க்வாட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் காங்கிரஸ் கட்சியின் தெலங்கானா பொறுப்பாளராக பிசி விஷ்ணு ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் டெல்லி மற்றும் அரியானா பொறுப்பாளராக தீபக் பாபாரியாவும், காங்கிரஸ் கட்சியின் செயலாளராக மன்சுர் அலிகான் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications