ஊரடங்கை மீறி புதுச்சேரியில் போராட்டம்.. காங். கூட்டணிக் கட்சிகளால் பரபரப்பு.. வலுக்கட்டாயமாக கைது!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய அரசு நிதி வழங்காததை கண்டித்து, ஊரடங்கு உத்தரவை மீறி வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு தர்ணாவில் ஈடுபட முயன்ற ஆளும் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
Recommended Video
புதுச்சேரி மாநிலத்தில் தற்போது 3 பேர் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு, புதுச்சேரி மாநிலத்திற்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 995 கோடி வழங்க வேண்டுமென முதலமைச்சர் நாராயணசாமி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். ஆனால் மத்திய அரசு புதுச்சேரிக்கு இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

ஆனால் பிற மாநிலங்களுக்கு நிதி தரப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு நிதி வழங்கிய மத்திய அரசு யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு நிதி அளிக்காதது மக்களை வஞ்சிக்கும் செயல் என காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மேலும் புதுச்சேரிக்கு நிதி அளிக்காத மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து இன்று கறுப்பு கொடியுடன் தர்ணா போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்தன.

அதன்படி இன்று தர்ணா போராட்டம் நடத்துவதற்காக மிஷன் வீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம் தலைமையில், மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், திமுக அமைப்பாளர்கள் சிவக்குமார், சிவா எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரதேச செயலாளர் ராஜங்கம், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிககள் கறுப்புக்கொடி ஏந்தியும், கறுப்பு பேட்ஜ் அணிந்தும் திரண்டனர்.

இதையடுத்து போலீஸார் ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி போராட்டம் நடத்தக்கூடாது என்று கூறி அவர்களை வலுகட்டாயமாக கைது செய்தனர். அப்போது அவர்கள், மத்திய அரசு தொடர்ந்து புதுச்சேரி மாநில மக்களை வஞ்சித்து வருகிறது என்றும், புதுச்சேரி மாநிலத்திற்கு ஜி.எஸ்.டி இழப்பீடு, 7 வது சம்பள கமிஷன் என பல்வேறு வகையிலான நிதிகளை மத்திய அரசு வழங்கக்கோரியும், மத்திய அரசு நிதி தர மறுத்து வரும் நிலையில், அதனை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பெற்றுத் தரக்கோரியும், பதாகைகளை கையில் ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து போலீசார் அவர்களை தனித்தனி வாகனங்களில் ஏற்றி வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு அழைத்துச்சென்றனர். தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்ற சுமார் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக கடற்கரை சாலையில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். கடற்கரை சாலை மூடப்பட்டுள்ளதால் தலைமை தபால்நிலையத்திற்கு போராட்ட இடத்தை மாற்றினர். இதற்காக மிஷின் வீதியில் அவர்கள் திரண்டபோது கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications