புதுச்சேரியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..
புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 100 ஐ நெருங்கியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் நேற்று வரை 90 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 57 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் புதிதாக வில்லியனூர், கொம்பாக்கம், சுதானா நகர், விவிபி நகர், பூரணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்களில் ஒருவர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், 8 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 63 ஆகவும், மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 99 ஆகவும் உயர்ந்துள்ளது. ஏற்கனவே 33 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது மேலும் 3 பேர் குணமாகியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, புதுச்சேரியில் நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரை புதிதாக மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மொத்தம் 63 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 36 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், 25 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சையில் உள்ளனர். சேலம், சென்னையில் தலா ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் குணமடைந்துள்ளனர்.
மாநிலத்தில் மொத்தமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7,576 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 7,447 பேருக்கு நெகட்டிவ் வந்துள்ளது. 29 பேருக்கு முடிவு வரவேண்டியுள்ளது. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அனைத்து மாநிலங்களிலும் தொற்று அதிகரித்து வருகிறது.
புதுச்சேரியில் முதல் 50 நாட்களில் வெறும் 3 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் கடந்த 20 நாட்களில் தினமும் 4 முதல் 5 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது ஜூன், ஜூலை மாதங்களில் நிச்சயமாக 500 பேர் வரை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதற்கு தேவையான படுக்கைகள், மருத்துவ உபகரணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.

எவ்வளவுதான் நாம் நடவடிக்கை எடுத்தாலும், தளர்வுகள் அதிகரித்தால் இதனை கட்டுப்படுத்த முடியாது. மக்கள் அனைவரும் கடந்த 2 மாதங்களாக வருவாய் இல்லாத காரணத்தால் அதிகளவில் வெளியே நடமாட தொடங்கிவிட்டனர். எனவே மக்கள் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது போன்ற அனைத்து கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறும்போது, தினமும் 8 முதல் 9 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பாதிப்பு எண்ணிக்கை இன்னும் 25 நாட்களில் சாதாரணமாக 100 ஐ தாண்டிவிடும். ஆகவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நம்மிடம் உள்ள மருத்துவ வசதி பற்றாக்குறை ஆகிவிடக்கூடாது என்பதில் மக்களின் பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டும். எனவே அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மோகன்குமார் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications