புதுவை சட்டப்பேரவை ஊழியருக்கு கொரோனா.. கலக்கத்தில் முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள்
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து சட்டப்பேரவை முழுவதும் கிருமிநாசினி அடிக்கும் பணிகள் நடைபெற்றது. இதனால் முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் சோதனை செய்த பின்பே சட்டப்பேரவை உள்ளே செல்கின்றனர்.
Recommended Video

புதுச்சேரி மாநிலத்தில் நேற்று வரை 70 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவற்றில் 46 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் மேலும் தற்போது 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 49 ஆகவும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74 ஆகவும் உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 4 நபர்களில், புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து சட்டப்பேரவை அலுவலகம், முதலமைச்சர் அறை உள்ளிட்ட அமைச்சர்கள் அறைகள் மற்றும் சட்டமன்றம் கூடும் அவை உள்ளிட்டவைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவை அலுவலகத்தில் பொதுமக்கள் யாரையும் அனுமதிக்கப்படவில்லை. முதலமைச்சர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் உடல் வெப்பம் பரிசோதனை செய்த பின்னரே அலுவலகத்தில் சென்றார்கள். மேலும் தொற்று பாதித்த நபருடன் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்று சுகாதாரத்துறை விசாரணை செய்து வருகின்றது.

-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications