புதுவையில் கொரோனா அதிகரித்தால் பகுதி நேர ஊரடங்கு அமலாகும்: துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தால் மாநிலம் முழுவதும் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
புதுச்சேரியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனத்தை இன்று தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கிவைத்தார். இதன் பின் செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:

நடமாடும் தடுப்பூசி வாகனம்
புதுச்சேரியில் படுக்கை வசதி, வெண்ட்டிலேட்டர் வசதி, மருத்துவ குழுவினர் உள்ளடக்கிய நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

முக கவசம் கட்டாயம்
அனைவரும் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். விவசாயிகள் ஒன்று கூடும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனம் செல்லும்

கொரோனாவை தடுப்போம்
100 பேருக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலைகளுக்கும் தடுப்பூசி வாகனம் சென்று தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும். இது நல்ல வரவேற்பை கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கொரோனா பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பகுதி நேர ஊரடங்கு அமலாகும்
மக்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம் முக்கியம். பல இடங்களில் முழு அடைப்பு நடைமுறைப்படுத்தி இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் புதுச்சேரியில் முழு ஊரடங்கு போடப்படாது. ஆனால் கொரோனா பரவல் அதிகரித்தால் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நிலைக்கு செல்லாமல் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications