டைமுக்கு வந்தும்! இன்னும் பேசாத விஜய்! கேரவனில் அமர்ந்து கூட்டத்தை ரசிக்கிறாரா? இன்னும் திருந்தலையே
புதுச்சேரி: 10 நிமிடத்திற்கு முன்பு வந்தும் இன்னும் விஜய் பேச வெளியே வராததால், அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையிலும் அவர் வெளியே வந்து பேசாமல் இருந்து வருவது, கரூர் சம்பவத்தில் இருந்து இன்னும் பாடம் கற்கவில்லை என்பது தெரிகிறது.
புதுவை உப்பளம் துறைமுகம் மைதானத்தில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் கூட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு விஜய்க்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கரூர் கூட்டம் போல் இல்லாமல் நீலாங்கரை வீட்டிலிருந்து விஜய் சீக்கிரமாகவே வந்துவிட்டார். அது போல் அவர் புதுவைக்குள் வந்த போது வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் காரில் இருந்து இறங்கி பிரச்சார வாகனத்தில் ஏறினார். இந்த நிலையில் விஜய் சொன்ன நேரத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு வந்துவிட்டார். ஆனாலும் அவர் இன்னும் பேச வரவில்லை.
கூட்டம் அலைமோதுகிறது. பாஸ் இல்லாதவர்களும் முண்டியடித்துக் கொண்டு உள்ளே வருகிறார்கள். இந்த நிலையில் விஜய்யை சீக்கிரம் வந்து பேசுமாறு புஸ்ஸி ஆனந்திடம் எஸ்எஸ்பி கலைவாணன் கூறி அனுப்பினார். விஜய்க்கு கொடுத்த நேரம் முடிய இன்னும் அரை மணிநேரம்தான் இருக்கிறது. ஆனாலும் அவர் வரவில்லை. புஸ்ஸி ஆனந்த் பேசினார், தற்போது ஆதவ் பேசி வருகிறார், இன்னும் யாரெல்லாம் பேச போகிறார்களோ, விஜய் எப்போது பேச போகிறாரோ என தெரியவில்லை.
கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான போது விஜய் தனக்கு கூடிய கூட்டத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார் என்றும் அதனால்தான் நீண்ட நேரமாக பிரச்சார வாகனத்தை விட்டு அவர் வெளியே வராமல் இருந்தார். இதனால்தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் இறந்ததாகவும் சொல்லப்பட்டது. ஆனாலும் விஜய் அந்த கரூர் சம்பவத்தில் இருந்து இன்னும் பாடம் கற்கவில்லை என்பது வேதனையிலும் வேதனை!












Click it and Unblock the Notifications