புதுச்சேரி சட்டசபை இடைத் தேர்தல்.. திமுக அபார வெற்றி!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெங்கடேசன் 1,539 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
புதுச்சேரி மாநிலத்தில் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மூன்று சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
எண்ணிக்கையில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நெடுஞ்செழியன் 9,367வாக்குகளும், காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெங்கடேசன் 10,906 வாக்குகளை பெற்றனர்.

என் ஆர். காங்.
இந்நிலையில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் நெடுஞ்செழியனை விட 1,539 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெங்கடேசன் வெற்றி பெற்றார்.

திமுகவுக்கு வெற்றி
இதனைத்தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியே வந்த வெங்கடேசனை திமுக தொண்டர்கள் தோளில் தூக்கி கோஷங்களை எழுப்பி கொண்டாடினர்.

வெற்றி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெற்றிக்காக உழைத்த கூட்டணி கட்சியினருக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், வெற்றியை தளபதி ஸ்டாலினுக்கு காணிக்கை அளிப்பதாக தெரிவித்தார் அவர்.

வாக்காளர்களுக்கு நன்றி
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலின்போது மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன் என்றும், வாக்களித்த வாக்காளர்களுக்கு தனது நன்றி தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்தார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications