Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்வேயர் டூ டிஆர்ஓ.. அரசு நில அளவையாளர் ரேணுகாதேவி.. ரொம்ப அசிங்கமா போயிருச்சு.. கலங்கிய காரைக்கால்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: சர்வேயர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.. நேற்றைய தினம், வருவாய் ஆய்வாளர் கைதான நிலையில், இன்று இன்னொரு பெண் அதிகாரியும் கைதாகி உள்ளது, பெரும் கவலைக்கும், பரபரப்புக்கும் ஆளாகி உள்ளது.. என்ன நடந்தது?

பத்திர பதிவுத்துறையில், பட்டா, பத்திரப்பதிவு போன்ற விஷயங்களில் லஞ்ச நடமாட்டம் பெருகியபடியே உள்ளது.. இந்த முறைகேடுகளை தடுப்பதற்காகவே, ஏகப்பட்ட அதிரடிகளையும், கடிவாளங்களையும் தமிழக பதிவுத்துறை, தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. எனினும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது.

land surveyor karaikal

பெண்கள்: குறிப்பாக, பெண் அதிகாரிகளே, லஞ்சம் வாங்கி, ஆங்காங்கே கைதாகி வருவது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. லஞ்சம், ஊழல் தொடர்பாக அரசு ஊழியர்கள், அதிகாரிகளும் ஊழல் தடுப்பு போலீசாரால் தொடர்ந்து சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வந்தாலும்கூட, பெண் அதிகாரிகளின் லஞ்ச லாவண்யம் அதிகரித்து கொண்டேயிருக்கிறது.

நேற்றுகூட, ராமநாதபுரத்தில் பெண் அதிகாரி கைதாகியிருக்கிறார்.. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகா ஆப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், தன்னுடைய தந்தையின் பெயரில் ஆப்பனூர் பெரிய கண்மாயிலிருந்து வண்டல் மண் எடுத்துச் செல்வதற்கு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பம் செய்தார்...

பின்னர், ஆப்பனூர் பிர்காவை சேர்ந்த, வருவாய் ஆய்வாளர் ரெபெக்கால் (40) என்ற பெண் அதிகாரியை சந்தித்து, இதுசம்பந்தமான விவரத்தை கேட்டிருக்கிறார்.. அப்போது, வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியரின் ஜீப் ஓட்டுநர் சத்தியநாதன் இருவரும், கண்மாயில் மண் எடுப்பதற்கான அனுமதி ஆணை வாங்கி தருவதற்கு தங்களுக்கும், வட்டாட்சியருக்கும் சேர்த்து ரூ.4 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டுமென கேட்டிருக்கிறார்கள்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ராமச்சந்திரன், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இறுதியில், ரசாயனம் தடவப்பட்ட பணம் ரூ.4 ஆயிரத்தை பெற்றபோது, 2 பேரையுமே போலீசார் கைது செய்தனர்.

இன்றைய தினமும் இன்னொரு சம்பவம் காரைக்காலில் நடந்துள்ளது.. கோவில்பத்து வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தினை, பொலிவுறு நகர திட்டத்துக்காக சுற்றுலாத் துறைக்கும் வழங்குவதாக போலி அரசாணை, சோஷியல் மீடியாவில் பரவியது. எனவே, இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று இந்து முன்னணி தரப்பில், மாவட்ட கலெக்டரிடம் புகார் தரப்பட்டது.

ஆனால், இந்த நில மோசடியில் அரசு அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை தலையீடு இருப்பதால், இது தொடர்பான விசாரணைகள் அனைத்தும், சீனியர் எஸ்பி தலைமையிலான தனிப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

பின்னர் மாவட்ட துணை ஆட்சியர் புகாரின் பேரில் சிவராமன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டபோதுதான், என்ஆர் காங்கிரஸ் பிரமுகர் ஜேசிபி ஆனந்த் என்பவரது பெயர் அடிபட்டது.. உடனே போலீசார், ஆனந்த் உட்பட பலர் மீது வழக்குகளை பதிவு செய்தனர்.. ஆனால், அதற்குள் ஆனந்த் தலைமறைவாகிவிட்டார்.. எனவே, அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதனிடையே, போலி ஆவணங்கள் தயார் செய்தது தொடர்பாக காரைக்கால் நகராட்சியில் பணிபுரியும் அரசு நில அளவையாளர் ரேணுகாதேவியை போலீசார் கைது செய்துள்ளனர்..

முக்கிய புள்ளிகள்: என்.ஆர்.காங்கிரஸ் ஆனந்த் மற்றும் சர்வேயர் ரேணுகாதேவியிடம் விலை உயர்ந்த 2 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.. இப்போது ரேணுகா தேவி ஜெயிலில் உள்ளார்.. அதுமட்டுமல்ல, கோவில் நில மோசடியில் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் முக்கிய புள்ளிகள் என 21 பேர் போலீசாரின் விசாரணை வளையத்தில் தற்போது வந்துள்ளனர். இதனால், புதுச்சேரியில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+