தமிழகத்தை விட புதுச்சேரி வாக்காளர்கள் டாப் - 81.64% வாக்குகள் பதிவு
புதுச்சேரி மாநிலத்தில் இன்று 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. அதிகபட்சமாக ஏனாமில் 91.27 சதவீத வாக்குகள் பதிவாகின.
புதுச்சேரி: புதுச்சேரியில் 30 சட்டசபைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 324 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 81.64% வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக ஏனாம் தொகுதியில் 91.27 சதவிகித வாக்குகள் பதிவாகின.
Recommended Video

புதுச்சேரி முழுவதும் 10 லட்சத்து 4 ஆயிரத்து 507 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 341 பேர் ஆண் வாக்காளர்கள, 5 லட்சத்து 31 ஆயிரத்து 383 பேர் பெண் வாக்காளர்கள்,இ இதர பிரிவினர் 116, புலம்பெயர்ந்த இந்தியர்கள் 357, பணி வாக்காளர்கள் 310 பேர் ஆகியோர் அடக்கம்.

புதுச்சேரி முழுவதும் 635 இடங்களில் ஆயிரத்து 558 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வாக்குப்பதிவுக்காக 1558 கண்ட்ரோல் யூனிட், 1677 ஓட்டுப்பதிவு எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.
80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 2 ஆயிரத்து 928 பேர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆயிரத்து 546 பேர் தபால் ஓட்டளித்துள்ளனர்.. இதேபோல், கொரோனா பாதித்து தனிமையில் உள்ள 34 பேரும், அத்தியாவசிய பணியில் உள்ள 68 பேரும், வாக்குச்சாவடி பணியில் உள்ள 8 ஆயிரத்து 117 பேரும் தபால் ஓட்டளித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக புதுச்சேரியில் இதுவரை 12 ஆயிரத்து 693 பேர் தபால் ஓட்டளித்துள்ளனர்.
என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி, ஏனாம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் லாஸ்பேட்டை தொகுதியிலும் போட்டியிடுகிறார். முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் மண்ணாடிப்பட்டு தொகுதியில் களமிறங்கியுள்ளார். புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் காரைக்கால் வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது. அங்கு மொத்தம் 81.64% வாக்குகள் பதிவாகியுள்ளன.
30 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் விபரம்:
1. மண்ணாடிப்பட்டு- 87.78
2. திருபுவனை- 86.55
3. ஊசுடு- 88.46
4. மங்கலம்- 86.28
5. வில்லியனூர்- 81.39
6. உழவர்கரை- 75.42
7. கதிர்காமம்- 76.00
8. இந்திராநகர்- 79.58
9. தட்டாஞ்சாவடி- 75.08
10. காமராஜ் நகர்- 76.78
11. லாஸ்பேட்டை- 78.99
12. காலாப்பட்டு- 83.90
13. முத்தியால்பேட்டை- 77.22
14. ராஜ்பவன்- 73.25
15. உப்பளம்- 83.71
16. உருளையன்பேட்டை- 80.54
17. நெல்லித்தோப்பு- 81.30
18. முதலியார்பேட்டை- 81.09
19. அரியாங்குப்பம் - 82.41
20. மணவெளி- 84.38
21. ஏம்பலம்- 87.30
22. நெட்டப்பாக்கம்- 85.77
23. பாகூர்- 87.90
24. நெடுங்காடு- 82.94
25. திருநள்ளாறு- 83.90
26. காரைக்கால் வடக்கு- 77.44
27. காரைக்கால் தெற்கு- 75.04
28. நிரவி- 81.50
29. மாகி- 73.53
30 ஏனாம் - 91.27
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications