“எங்களை உள்ளே விடுங்க”.. புதுச்சேரி எல்லையில் போலீசாருடன் பாஸ் இல்லாத தவெக தொண்டர்கள் வாக்குவாதம்!
புதுச்சேரி: தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரியில் நடத்தும் பிரச்சாரக் கூட்டத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது. எல்லையில் தீவிர கண்காணிப்பில் புதுச்சேரி போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தங்களை அனுமதிக்க வேண்டும் என எல்லையில் போலீசார் உடன் தவெகவினர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் விஜய் பங்கேற்கும் தவெக பொதுக்கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கும் நிலையில், தவெக தொண்டர்கள் இன்று அதிகாலை முதலே குவியத் தொடங்கினர். பொதுக்கூட்டம் நடைபெறும் உப்பளம் மைதானம் பகுதிக்குள் செல்ல தொண்டர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

2 மாதங்களுக்கு பிறகு விஜய் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த கூட்டம் அண்டை மாநிலமான புதுச்சேரியில் நடைபெறுகிறது. புதுச்சேரியில் ரோடு ஷோ சென்று மக்களை சந்திப்பதாக முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி புதுச்சேரி போலீசார் ரோடு ஷோவுக்கு அனுமதி அளிக்கவில்லை. ரோடு ஷோவுக்கு பதிலாக பொதுக்கூட்டத்தை நடத்தி கொள்ளுமாறு த.வெ.க நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று தவெக பொதுக்கூட்டம் புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெறுகிறது. புதுச்சேரி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த, கியூ ஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் உள்பட தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. புதுச்சேரி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, தொண்டர்களும், பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என தவெக சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி எல்லையில் தீவிர கண்காணிப்பில் புதுச்சேரி போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தங்களை அனுமதிக்க வேண்டும் என எல்லையில் போலீசார் உடன் தவெகவினர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போலீஸ் தீவிர சோதனை நடத்தி அவர்கள் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதாலும், அவர்களிடம் தவெக பொதுக்கூட்டத்துக்கான பாஸ் இல்லாததாலும் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு நிலவி வருகிறது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
விஜய்யை ஒருமையில் பேசிய சீமானுக்கு சிக்கல்? சென்னை போலீஸ் கமிஷனரிடம் தவெக வழக்கறிஞர் புகார் -
50+ வீடியோ.. சேலம் மணிகண்டன்.. சிபிஎம், டிடிவி தினகரன் விஜய்க்கு வைத்த கோரிக்கை -
"டாஸ்மாக் கடைகளில் MRP-ஐ மீறி 1 ரூபாய் கூட வாங்க கூடாது.. தவறு செய்தால் டிஸ்மிஸ்”.. அமைச்சர் அதிரடி! -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
சில நாய்களுக்கு நான்வெஜ்தான் பிடிக்கும்.. ராகவா லாரன்ஸ் பேச்சால் வெடித்த சர்ச்சை! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
அடித்து தூக்கும் விஜய்.. நில ஒதுக்கீட்டில் ராக்கெட் வேகம்.. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
தமிழ்நாட்டில் விஜய்.. தெலங்கானாவில் விஜய் தேவரகொண்டா! உற்று பார்க்கும் தெலுங்கு மக்கள்! என்ன மேட்டர் -
திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு! -
இது லிஸ்ட்லயே இல்லையே? பட்ஜெட்டுக்கு முன் முழு பயிர்க் கடன் தள்ளுபடி? விஜய் கையில் வேற லெவல் ப்ளான்!












Click it and Unblock the Notifications