புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தந்தி டிவி: புதுவையில் என் ஆர் காங். கூட்டணி 23 இடங்களில் வெல்லும்.. காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுவையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி 23 இடங்களில் வெல்லும் என தந்தி டிவி கருத்து கணிப்பு முடிவுகள் சொல்கின்றன.

புதுவையில் 30 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அது மட்டுமல்லாமல் 3 நியமன எம்எல்ஏக்களும் உள்ளனர். இந்த நிலையி்ல கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதுவையில் நாராயணசாமியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

 Exit poll 2021: Thanthi TV says that N.R.Congress will form government in Pondicherry

புதுவையில் புதிய ஆட்சி அமையும் வரை முக்கிய முடிவுகளை துணை நிலை ஆளுநர் பொறுப்பு தமிழிசை சவுந்திரராஜன் எடுத்து வருகிறார். இந்த நிலையில் புதுவைக்கு ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் புதுவையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை சூழ்ச்சி செய்து பாஜக கவிழ்த்துவிட்டதாக காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது. ஆனால் எக்சிட் போல் முடிவுகளை பார்த்தால் காங்கிரஸ் நினைத்தது நடக்காது என்றே தெரிகிறது.

புதுச்சேரியில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறார் ரங்கசாமி : எக்சிட் போல் முடிவுகள்புதுச்சேரியில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறார் ரங்கசாமி : எக்சிட் போல் முடிவுகள்

தந்தி டிவி வெளியிட்ட கருத்து கணிப்புகளின் முடிவுகளின் படி புதுச்சேரியில் என்.ஆர். காங்- பாஜக அணி 23 இடங்களிலும் காங்கிரஸ்- திமுக 3 இடங்களிலும் வெல்லும். மீதமுள்ள 4 தொகுதிகளில் இழுபறி நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆக புதுவையில் என் ஆர் காங்கிரஸ் பாஜக அரசே ஆட்சி அமைக்கும் வாய்ப்புள்ளது.

English summary
Exit poll 2021: Thanthi TV says that N.R.Congress will form government in Pondicherry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X