2021-ல் எக்சிட் போல் முடிவுகள் எப்படி இருந்தது? புதுவையில் அப்படியே பலித்ததா? பொய்த்ததா? இதோ விவரம்
சென்னை: 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில், சற்று நேரத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாக உள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் புதுச்சேரியில் கடந்த 2021-ல் என்ன மாதிரியான கணிப்பு முடிவுகள் வெளியாகின. தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தன என்ற விவரங்களை பார்க்கலாம்.
புதுவை யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக, லாட்டரி மார்ட்டின் மகன் ஜோஸ் மார்ட்டினின் லட்சிய ஜனநாயக கட்சி ஆகியவை அங்கம் வகிக்கின்றன.

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக, விசிக ஆகிய கட்சிகள் களம் இறங்கியுள்ளன. ஆட்சியை தக்க வைக்க என்.ஆர் காங்கிரஸ் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியும் இழந்த ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் - திமுகவும் மல்லு கட்டி வருகின்றன. புதுவையில் வரலாறு காணாத அளவு வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது.
விஜய்யின் தவெகவும் கோதாவில் இறங்கியுள்ளதால் இந்த முறை ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற எதிபார்ப்பு கிளம்பியுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளன. புதுவை தேர்தல் முடிவு என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்புக்கு முன்னோட்டமாக இந்த கருத்துக்கணிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த 2021 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அப்படியே பலித்ததா? இல்லையா என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
2021ல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள்:
ஏபிபி சி வோட்டர்:
தேசிய ஜனநாயக கூட்டணி: 19 - 23
காங்கிரஸ் - திமுக கூட்டணி: 6 - 10
பிற கட்சிகள்: 1-2
ரிபெபிளிக்: சிஎன்.எக்ஸ்
தேசிய ஜனநாயக கூட்டணி: 16 - 20
காங்கிரஸ் திமுக: 11 - 13
இந்தியா டுடே ஆக்சிஸ்:
தேசிய ஜனநாயக கூட்டணி: 20 முதல் 24
காங்கிரஸ்: திமுக கூட்டணி: 6 முதல் 10
2021 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்கு என்றே கூறின. தேர்தல் முடிவுகளும் அதையே பிரதிபதிபலித்தன.
2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
தேசிய ஜனநாயக கூட்டணி: 16
(என்.ஆர். காங்கிரஸ்: 10, பாஜக: 06)
இந்தியா கூட்டணி - 8
(காங்கிரஸ்: 02, திமுக: 6)
சுயேச்சை: 06
என்பதே தேர்தல் முடிவாக இருந்தது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications