திருமணம் ஆகாத இளைஞனுடன் ஓடிவந்த பெண் வேட்பாளர்.. புதுச்சேரி லாட்ஜில் நடந்த விபரீதம்
புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் வேலூரைச் சேர்ந்த ஆண், பெண் இருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Recommended Video
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் வீதியில் ஒரு தனியார் விடுதி உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் வேலூர் காட்பாடி பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (28) என்பவர் 35 வயதுடைய பெண்ணுடன் அறை எடுத்து தங்கி உள்ளார்.
நேற்று காலை வெகு நேரமாகியும் அவர்கள் தங்கியிருந்த அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் அறையின் கதவை திறந்து பார்த்தனர்.

போலீஸ் வருகை
அப்போது இருவரும் தூக்கிட்ட நிலையில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து புதுச்சேரி பெரியக்கடை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

யார் இவர்கள்
இதுகுறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட இருவரும் வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக தங்கிவிட்டு புதுச்சேரியில் நேற்று நள்ளிரவில் அறை எடுத்து தங்கியதாகவும், மேலும் துப்பட்டாவில் அந்த இளைஞரும் போர்வையால் அந்தப் பெண்ணும் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்ததுள்ளது.

கள்ளக்காதல்
இது தொடர்பாக போலீசார் கூறும் போது, வேலூர் கருகம்புத்தூரைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையில் அட்டெண்டராக வேலை பார்த்து வந்துள்ளார் மோகன்ராஜ் (20). இவரது வீட்டின் அருகே வசிக்கும் கார்த்திக்கின் மனைவி நந்தினி(26). தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

அடிக்கடி சண்டை
இந் நிலையில் மோகன்ராஜுக்கு நந்தினியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலில் விழுந்துள்ளார் இது நந்தினியின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் கண்டித்த போதிலும் மோகன்ராஜுடன் பழகுவதை நிறுத்தவில்லை. இதனால் தம்பதிக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது.

புதுச்சேரி வருகை
இதையடுத்து நந்தினியும் மோகன் ராஜும் வீட்டை விட்டு சென்றுவிடலாம் என்று முடிவு செய்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு காட்பாடி ரயில் நிலையம் வந்து ரயிலில் சென்னைக்கு போயிருக்கிறார்கள். அங்கிருந்து புதுச்சேரிக்கு கடந்த 30ம் தேதி சென்றனர். அங்கு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி ஊர் சுற்றி உள்ளனர்.

வேட்பாளர் நந்தினி
இது ஒருபுறம் எனில் நந்தினி வரும் 9ம் தேதி நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில், வேலூர் கருகம்புத்தூர் ஊராட்சியில் 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மனுதாக்கல் செய்திருந்திருக்கிறார். அவருக்கு கட்டில் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

அவமானத்தால் தற்கொலை
திருமணம் ஆகாத இளைஞனுடன் சேர்ந்து ஊரை விட்டு ஓடி வந்துவிட்டார்கள். மீண்டும் ஊர் திரும்பினால் அவமானம் எனக்கருதி நந்தினி தனது தாலியை கழற்றி வைத்துவிட்டு, மோகன்ராஜுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்" கள்ளக்காதல் விவகாரத்தால் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட பெண் புதுச்சேரி லாட்ஜியில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications