கொலை மிரட்டல் விடுத்த தவெக எம்எல்ஏ.. அதிரடியாக வழக்குப்பதிந்த போலீஸ்! யார் இந்த சாய் சரவணக்குமார்?

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் 'வேர்ல்பூல்' தொழிற்சாலை நிறுவனத்துக்குள் நுழைந்து ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் திருபுவனை தொகுதியின் தவெக எம்எல்ஏ சாய் சரவணக்குமார் மீது போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஒன்று திருபுவனை சட்டசபை தொகுதி. இங்கு சாய் சரவணக்குமார் வெற்றி பெற்றார். இரண்டாவது மணவெளி சட்டசபை தொகுதி. இங்கு தவெகவில் போட்டியிட்டு ராமு வெற்றி பெற்றார்.

fir-files-against-thirubhuvanai-tvk-mla-sai-saravana-kumar-in-puducherry

இந்நிலையில் தான் புதுச்சேரி திருபுவனை தொழிற்பேட்டையில் இயங்கி வரும் 'வேர்ல்பூல்' நிறுவனத்துக்கு நேற்று தவெக எம்எல்ஏ சாய் சரவணக்குமார் சென்றார். தொழிற்சாலையை ஆய்வு செய்ய வந்திருப்பதாக கூறி அவர் உள்ளே நுழைந்துள்ளார்.

இதற்கு அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது எம்எல்ஏ சாய் சரவணக்குமார் தரப்பினர் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசில் புகார் செய்ப்பட்டது. அதன்பேரில் போலீசார் சாய் சரவணக்குமார் மீது கொலை மிரட்டல், அத்துமீறி நுழைதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+