கணவர் மீது போலீசில் புகார் கொடுத்த முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா.. புதுச்சேரியில் பரபர!
புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா சமீபத்தில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் சந்திர பிரியங்கா, தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. காரைக்கால் நெடுங்காடு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏவான சந்திரபிரியங்கா போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்து வந்தார். சந்திர பிரியங்கா, போக்குவரத்து, ஆதி திராவிடர் நலத்துறை, வீட்டு வசதி, தொழிலாளர் நலன், வேலை வாய்ப்பு உள்ளிட்ட துறைகளை கைவசம் வைத்திருந்தார்.

இந்நிலையில், இரண்டரை ஆண்டுகளாக அமைச்சர் பதவியில் இருந்து வந்த சந்திரபிரியங்கா கடந்த அக்டோபர் 10ஆம் தேதியன்று திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா தொடர்பான அறிக்கையை அவர் வெளியிட்டார். அதில் சாதி ரீதியிலும், பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்ந்தேன் எனக் குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது.
ஆனால் சந்திர பிரியங்கா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். அவரது செயல்பாடு சரியில்லாததால் முதல்வர் ரங்கசாமி அவரை நீக்கம் செய்ய கடிதம் கொடுத்தார். அந்தக் கடிதம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. யூனியன் பிரதேசம் என்பதால் பதவி நீக்கத்துக்கு உள்துறை அமைச்சகத்தின் வாயிலாக குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற வேண்டும். அதற்குள் சந்திர பிரியங்கா ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் எனத் தெரிவித்தார்.
இதனால் அமைச்சர் பதவியில் இருந்து சந்திர பிரியங்கா நீக்கப்பட்டாரா அல்லது ராஜினாமா செய்தாரா என்ற குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில் சந்திரபிரியங்கா பதவி நீக்கம் செய்ததை குடியரசுத் தலைவர் ஏற்று கொண்டு, அதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. இதையடுத்து புதுச்சேரி அரசிதழிலும் வெளியிடப்பட்டது.
இதற்கிடையே, சந்திர பிரியங்கா கடந்த 6 மாத காலமாக கணவர் சண்முகத்தை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது சந்திர பிரியங்காவின் அமைச்சர் பதவி பறிப்பால் மகிழ்ச்சியடைந்த கணவர் சண்முகம், ஸ்டீரீட் டான்ஸ் ஆடிய வீடியோவை இஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார். இது சமூக வலைதளங்களில் பரவியது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சந்திரபிரியங்கா டிஜிபி ஸ்ரீநிவாசனை நேரில் சந்தித்து, தனது கணவர் சண்முகம் மீது புகார் அளித்துள்ளார். தனது கணவர் சண்முகம், தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தொடர்ந்து அவதூறாக பேசுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாய்மொழியாக புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக விசாரிக்குமாறு டிஜிபி, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications