புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"உனக்கு நான்.. எனக்கு நீ" முதியவரை கரம் பிடித்த 47 வயது பெண்.. புதுவை டூ பிரான்ஸுற்கு பறந்த அன்பு

Google Oneindia Tamil News

புதுவை: புதுவை மணக்குள விநாயகர் கோயிலில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த முதியவருக்கும் புதுவையை சேர்ந்த 47 வயது பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.

புதுச்சேரியை சேர்ந்த முதியவர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். 57 வயதான இவர் தனது உறவினர்களை காண புதுச்சேரிக்கு வந்துள்ளார். அப்போது தனது மனைவி இறந்துவிட்டதால் தனிமையில் வாடுவதாக கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் குடும்ப பொறுப்புகளை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதை பார்த்த உறவினர்கள் அப்பகுதியை சேர்ந்த கணவரை இழந்த 47 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 1.66 கோடி பேர் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு- சத்யபிரதா சாகு தகவல்!தமிழகத்தில் 1.66 கோடி பேர் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு- சத்யபிரதா சாகு தகவல்!

முதியவர்

முதியவர்

முதிவயரை திருமணம் செய்து கொள்ள அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்கும் அவர் சம்மதித்தார். இதையடுத்து நேற்று முன் தினம் மணக்குள விநாயகர் கோயிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணம்

திருமணம்

இந்த திருமணத்தை வீடியோவாக எடுத்த சிலர் அதனை சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில் மணமக்கள் இருவரது பெயர், ஊர் என எதுவும் தெரியாது. ஆனால் அவர்கள் இருவரும் மேஜரா என்பதை தெரிந்து கொண்டோம்.

இருவரும் திருமணம்

இருவரும் திருமணம்

மேலும் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள எம்எல்ஏ ஒருவரின் சிபாரிசு கடிதத்தை கொண்டு வந்தனர். அதனை ஏற்று திருமணம் செய்து வைத்தோம் என்றனர். அந்த பெண் அந்த முதியவருடன் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுவிடுவார். அந்த பெண் வீட்டாருக்கு ரூ 2.5 கோடி முதியவர் தரப்பிலிருந்து வழங்கப்பட்டதாக தெரிகிறது.

75 வயது

75 வயது

இந்த வீடியோ வைரலான நிலையில் பலர் 75 வயது முதியவருக்கும் இளம் பெண்ணுக்கும் திருமணம் நடந்ததாக கிளப்பினர். பணத்தை காட்டி இளம் பெண்ணை முதியவர் குடும்பம் வளைத்ததாகவும் பேசப்பட்டது. ஆனால் உண்மையில் இருவருக்கும் ஏற்கெனவே திருமணம் செய்து கொள்ள இருவரது முழு சம்மதத்துடன் பேசி வைக்கப்பட்டதாகவும் கொரோனா காலம் என்பதால் தங்களது திருமணம் செய்து கொண்டு உடனடியாக பிரான்ஸ் செல்ல முடியாது என்பதால் காத்திருந்து தற்போது கொரோனா தொற்று குறைந்ததால் நேற்று முன் தினம் திருமணம் செய்து கொண்டனர் என்பது தெரியவந்தது.

English summary
France elder man marries 47 years old girl in pondicherry. Video goes trending in social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X