தனியார் பேருந்துகளில் இன்று இலவச பயணம்.. உதயநிதி பிறந்தநாள் ஸ்பெஷல்! கட்டணம் செலுத்திய திமுக இளைஞரணி
புதுச்சேரி: தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரியில் இயங்கும் 47 தனியார் பேருந்துகள் மற்றும் 25 டெம்போக்களில் இன்று ஒருநாள் மட்டும் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது 48வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளை முன்னிட்டு தந்தையும், திமுக தலைவருமான முதல்வர் மு.க.ஸ்டாலின், தாயார் துர்கா ஸ்டாலினை இன்று காலை சந்தித்து ஆசி பெற்றார் உதயநிதி. அதைத்தொடர்ந்து, மெரினா கடற்கரை சென்று அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை கோபாலபுரம் கலைஞர் கருணாநிதி இல்லத்துக்கு சென்று கலைஞர் படத்துக்கு மரியாதை செலுத்தினார். வேப்பேரி பெரியார் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் இன்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கவும் திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
புதுச்சேரி மாநில திமுக சார்பிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் புதுச்சேரி மாநில திமுக இளைஞரணி சார்பில் புதுச்சேரி முழுவதும் தனியார் பேருந்துகளில் இன்று மக்கள் கட்டணம் இன்றி பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று புதுச்சேரி முழுவதும் பொதுமக்களுக்கான இலவச பேருந்துகள் மற்றும் டெம்போ பயணம் தொடக்க விழா திமுக மாநில இளைஞரணி அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக திமுக மாநில அமைப்பாளரும், புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா கலந்துகொண்டு பொதுமக்களுக்கான இலவச பேருந்து மற்றும் டெம்போ பயணத்தை தொடங்கி வைத்தார். இலவசமாக பயணிக்கலாம் என்பதைக் குறிப்பிடும் வகையில் தனியார் பேருந்துகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இன்று ஒரு நாள் முழுவதும் புதுச்சேரியில் நகரப் பகுதியில் இயக்கப்படும் 47 தனியார் பேருந்துகள் மற்றும் 25 டெம்போக்களில் பொதுமக்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். இதற்கான கட்டணத்தை திமுக இளைஞரணி செலுத்தியுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் திமுக ஆட்சி அமைந்தால், தமிழகத்தைபோல் புதுச்சேரியிலும் விடியல் பயணம் திட்டம் கொண்டுவரப்படும் என புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா தெரிவித்துள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ












Click it and Unblock the Notifications