ஆளுநர் கிரண்பேடி அதிரடி அனுமதி.. வரும் திங்கட்கிழமை முதல் புதுவையில் மதுக்கடைகள் திறக்க வாய்ப்பு!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் நீண்ட இழுபறிக்கு மதுபானக் கடைகளை திறப்பதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளித்துள்ளார். இதனால் புதுச்சேரியில் வரும் திங்கட்கிழமை முதல் மதுபானக் கடைகள் திறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் புதுச்சேரி, தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன. இதனிடையே மூன்றாம் கட்ட ஊரடங்கில் மத்திய அரசு சில தளர்வுகளை அளித்ததை தொடர்ந்து, தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

Governor Kiran Bedi has approved the opening of liquor shops in Puducherry

புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மதுக்கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஒப்புதல் கேட்டு துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது.

Governor Kiran Bedi has approved the opening of liquor shops in Puducherry
Governor Kiran Bedi has approved the opening of liquor shops in Puducherry

ஆனால் கோவிட் வரியை உயர்த்துமாறு தெரிவித்து ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்க மறுத்து வந்தார். இதனால் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. மேலும் புதுச்சேரியில் பெரும்பாலும் மதுக்கடைகள் தனியார் வசம் உள்ளதால், மாநிலத்தின் வருவாயை பெருக்க மதுக்கடை உரிமங்களை ஏலம் விட பொதுவான ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும் என துணைநிலை கிரண்பேடி வலியுறுத்தினார்.

Governor Kiran Bedi has approved the opening of liquor shops in Puducherry

இந்நிலையில் ஆளுநர் கிரண்பேடி கூறியபடி, மதுபானங்களுக்கு கோவிட் வரி விதிப்பதற்கு அமைச்சரவை ஒப்புகொண்டதையடுத்து, மதுபானக் கடைகளை திறப்பது தொடர்பான கோப்பிற்கு கிரண்பேடி தற்போது அனுமதி அளித்துள்ளார். இதனையடுத்து இதுதொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு, வரும் திங்கட்கிழமை முதல் புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Governor Kiran Bedi has approved the opening of liquor shops in Puducherry
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+