புதுச்சேரியில் ஜனவரி முதல் அமலாகும் புது ரூல்ஸ்.. நோட் பண்ணுங்க.. ஆக்ஷனில் இறங்கும் போலீஸார்
புதுச்சேரி: சாலை விபத்தில் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில், புதுச்சேரியில் 2025 புத்தாண்டு ஜனவரி முதல் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை சரியாகப் பின்பற்றி வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்தியாவில் சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாகனங்களை ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டும், தொலைபேசியில் பேசிக்கொண்டே வாகனங்களை இயக்கக் கூடாது, வேகமாக வாகனங்களை ஓட்டக் கூடாது, மது போதையில் வாகனங்களை இயக்கக் கூடாது என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் அனைத்துப் பகுதிகளிலும் சாலை விபத்து சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

சுற்றுலாப் பயணிகளின் டாப் 10 லிஸ்டில் புதுச்சேரியும் கட்டாயம் இடம்பிடித்திருக்கும். அந்த அளவுக்கு இயற்கையின் எழில் கொஞ்சும் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. குறிப்பாக, வார விடுமுறை தினங்கள், பண்டிகை நாட்களில் வெளி மாநிலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரி கடற்கரையில் குவிவது வழக்கம்.
புதுச்சேரி மாநிலம் சுற்றுலா தலத்தில் சிறந்து விளங்கி வருகிறது. இங்குள்ள சுற்றுலா தலங்களில் ராக் கடற்கரை முதலிடத்தில் உள்ளது. புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பலரும் குவியும் இடமாக முதல் மாநிலமாக புதுச்சேரி உள்ளது. அதேபோல, பல்வேறு வகையான சிற்றுண்டிகள், விதவிதமான உணவுகள் கிடைக்கும் இடமாகவும் புதுவை உள்ளது.
புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கடந்த 2017 ஆம் ஆண்டில் ஓர் அறிவிப்பு வெளியானது. ஆனால், அரசின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து, ஹெல்மெட் அணிவது தொடர்பான அறிவிப்பு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.
அதைத்தொடர்ந்து, புதுச்சேரி மாநிலத்தில் ஆளுநராக இருந்த கிரண்பேடி வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். ஆனாலும், வாகன ஓட்டிகள் அந்த அறிவிப்பை முறையாக கடைப்பிடிக்கவில்லை. குறைந்த எண்ணிக்கையிலான வாகன ஓட்டிகள் மட்டுமே முறையாக ஹெல்மெட் அணிந்து சென்றனர்.
புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. இந்நிலையில், 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் கட்டாயம் என்ற திட்டத்தை காவல் துறையினர் அமல்படுத்த உள்ளனர். இதுதொடர்பான கண்காணிப்பு பணிகளில் போக்குவரத்து போலீஸார் இறங்கியுள்ளனர். பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், வாகன ஓட்டிகள் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications