கலர் பொடிகளே சற்று ஓய்வெடுங்கள்.. ஹோலியை புதுஸ்ஸா கொண்டாடிய கிரண் பேடி!
புதுச்சேரி: தண்ணீரை சேமிப்பதற்காக பூக்களால் ஹோலி பண்டிகை கொண்டாடிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி.
புதுச்சேரியில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஜிப்மர் மருத்துவக்கல்லூரி, புதுவை பல்கலைக்கழகம் மற்றும் வடமாநில மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

ஹோலி பண்டிகை அன்று விடிய விடிய ஆட்டம் பாட்டம் என கொண்டாடி மகிழ்வார்கள். ஆனால் இந்தாண்டு கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க புதுச்சேரி அரசு ஹோலி பண்டிகை கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளது.

இதனால் இந்தாண்டு புதுச்சேரியில் ஹோலி பண்டிகை கலையிழந்து காணப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஆளுநர் மாளிகையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கிரண்பேடி இரண்டு வாரங்களுக்கு ரத்து செய்துள்ளார்.

இந்நிலையில் புதுச்சேரி ராஜ்நிவாசில் எளிமையான முறையில் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார் கிரண்பேடி. தண்ணீரை சேமிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், பூக்களை கொண்டு ஆளுநர் மாளிகை ஊழியர்களுடன் உற்ச்சாகத்துடன் ஹோலியை கொண்டாடியுள்ளார் கிரண்பேடி.

இதுதொடர்பான வீடியோ காட்சிகளை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள கிரண்பேடி, தண்ணீர் சிக்கனத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications