புதுச்சேரியில் இன்று ஆர்.எஸ்.எஸ். பேரணி - மனித சங்கிலி போராட்டத்தை முறியடிக்கும் எதிர்க்கட்சியினர்!
புதுச்சேரி: புதுசேரியில் இன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நடத்த உள்ள நிலையில், அந்த பேரணியை முறியடிக்கும் வகையில், மதச்சார்பற்ற கட்சிகள் சார்பில் மனித சங்கலி போராட்டம் நடைபெறுகிறது.
புதுச்சேரியில், காந்தி ஜெயந்தியான இன்று, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நடத்த காவல் துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர். என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு நடைபெற்று வரும் புதுச்சேரியில், ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த மாநில காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, புதுச்சேரியில் காமராஜர் சாலையில் இருந்து இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் பேரணி தொடங்குகிறது.

காரைக்காலில் புதிய பேருந்து நிலையத்தில் மாலை 4.30 மணிக்கு இந்த ஊர்வலம் புறப்பட்டு, நேரு வீதி, மிஷன் வீதி, புஸ்சி வீதி, மறைமலையடிகள் சாலைகள் என முக்கிய சாலைகளின் வழியாக கடற்கரைக்கு சென்று, சிங்காரவேலர் சிலை அருகே ஊர்வலம் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்-ன் இந்த ஊர்வலகத்திற்கு, முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமைதி பூங்காவாக திகழும் புதுச்சேரியில், மக்களிடையே பிளவை உண்டாக்கும் வகையில் இந்த பேரணி நடத்தப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் இந்தப் பேரணிக்கு, புதுச்சேரி ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்றும் காங்கிரஸ் - திமுக கூட்டணி கட்சியினர் விமர்சித்துள்ளனர்.
இதனிடையே, புதுச்சேரியில் இன்று நடைபெற உள்ள ஆர்.எஸ்.எஸ் பேரணியை முறியடித்து மத நல்லிணக்கத்தை காக்கும் வகையில் மதச்சார்பற்ற கட்சிகள் சார்பில் மனித சங்கலி போராட்டம் நடத்த உள்ளதாக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் சலீம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக எம்.எல்.ஏ சம்பத், காங்கிரஸ் எம்.எல்.ஏ வைத்தியநாதன், மதிமுக, விசிக, திக, மாணவர் கூட்டமைப்பு மற்றும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் மத நல்லிணக்கத்தை பலப்படுத்தும் வகையில் காலை, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சார்பில், மத நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications