புதுச்சேரியில் 100 ரூபாய் காய்கறி பேக் அறிமுகம்.. ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் மக்கள்
புதுச்சேரி: புதுச்சேரியில் மக்கள் கூட்டத்தை தவிர்க்க 13 வகையான காய்கறிகள் அடங்கிய பேக், 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வருகின்ற 14 ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இருந்தபோதிலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறந்து வைக்க அரசு அனுமதி அளித்திருந்தது. இதன் காரணமாக கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

மேலும் சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்கவில்லை. இதனால் தினமும் கடைகளை காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட்டது.

இருந்தபோதிலும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகளை வாங்க கடைகளுக்கு வரும் மக்கள், தங்களுக்கு தேவையான பொருட்களை தேர்வு செய்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதால், வைரஸ் தொற்று எளிதில் பரவும் அபாயம் உள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி புதுச்சேரி அருகே சுல்தான்பேட்டையில் உள்ள ஒருகாய்கறி கடையில், 13 வகையான காய்கறிகள் அடங்கிய பேக்,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதில், வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி தலா அரை கிலோ, கால் கிலோ கேரட், பீன்ஸ், பீட்ரூட், தலா 200 கிராம் நுாக்கல், சவ்சவ், கத்தரிக்காய், 100 கிராம் பச்சை மிளகாய், இஞ்சி, சிறிய காலிபிளவர், பீக்கங்காய், புடலங்காய், கோஸ், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை ஆகியவை உள்ளன. இந்த பேக்கின் மொத்த எடை 5 கிலோ வரை உள்ளது. பொதுமக்கள் சில நிமிடங்களிலேயே காய்கறி பேக் வாங்கிக்கொண்டு செல்வதால் கூட்டம் தவிர்க்கப்படுகிறது.

புதுச்சேரி அரசும் இந்த கடையில் இருந்து 100 ரூபாய் காய்கறிகள் அடங்கிய பேக்கை மொத்தமாக கொள்முதல் செய்து, திருக்கனூர், பத்துகண்ணு, திருபுவனை, மதகடிப்பட்டு உள்ளிட்ட கிராமப் பகுதிகளுக்கு சப்ளை செய்து வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் தற்போது மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications