புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவர்கள் 5 பேர், ஊர்காவல்படை வீரர் ஒருவர் உட்பட 12 பேருக்கு கொரோனா
புதுச்சேரி: புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவர்கள் 5 பேர், ஊர்காவல்படை வீரர் ஒருவர் உட்பட மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் நேற்று வரை 107 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 60 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் தற்போது புதிதாக ஜிப்மர் மருத்துவர்கள் 5 பேர், ஊர்காவல் படை வீரர் ஒருவர் உட்பட மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 70 ஆகவும், மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 119 ஆகவும் உயர்ந்துள்ளது.

ஏற்கனவே 47 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது மேலும் 2 பேர் குணமாகியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, புதுச்சேரியில் புதிதாக ஜிப்மர் மருத்துவர்கள் 5 பேர், மருத்துவர்களின் உறவினர்கள் 3 பேர், அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் டெக்னிஷியன் ஒருவர், கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் ஓட்டுநராக உள்ள ஊர்காவல் படை வீரர், புதிய சாரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், திலாசுப்பேட்டையைச் சேர்ந்த ஒருவர் என 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 3 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூயிலும், 9 பேர் ஜிப்மர் மருத்தவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தற்போது வரை 70 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு 119 ஆக உள்ளது.

அதுபோல் தற்போது 2 பேர் குணமடைந்து சென்றுள்ள நிலையில், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 8,118 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது. அதில் 7,968 பேருக்கு நெகட்டிவ் வந்துள்ளது. 32 பேருக்கு முடிவு வர வேண்டியுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications