ஜான்குமாருக்கு இதை விட எப்படி சிறந்த முறையில் நாராயணசாமி நன்றி சொல்ல முடியும்?
- கோயா
புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமார் போட்டியிடலாம் என்று பேச்சு அடிபடுகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் யார் வேட்பாளராக இருக்கப் போகிறார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி முதல்வராக உள்ள நாராயணசாமிதான் கடந்த 2014 லோக்சபா தேர்தலில் இங்கு போட்டியிட்டார். ஆனால் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் கடுமையான போட்டியை தாக்குப் பிடிக்க முடியாமல் தோல்வியைத் தழுவினார். பின்னர் முதல்வரானார்.

ஜான் குமார்
நாராயணசாமி முதல்வராக பதவியேற்றபோது அவர் எம்எல்ஏவாக இல்லை. இதனால் அவருக்காக வழி விட்டு தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்தான் ஜான் குமார். அவரது பெயர்தான் பலமாக அடிபடுகிறது.

நன்றிக் கடனாக சீட்
ஜான் குமாருக்கு சீட் கிடைக்க நாராயணசாமி தீவிரமாக முயல்கிறாராம். தனக்கு முதல்வர் பதவி நி்லைக்க வழி விட்டவர் என்பதால் ஜான் குமாருக்கு நன்றிக் கடனாக எம்பி பதவியை பரிசளிக்க அவர் விரும்புகிறாராம். இதனால் அவரது லாபி பலமாக இருக்கிறதாம்.

காரைக்கால் சுப்பிரமணியம்
அதேசமயம், மறுபக்கம் காரைக்காலைச் சேர்ந்த ஏவிஎஸ் சுப்பிரமணியும் போட்டிக் களத்தில் நிற்கிறாராம். ஆனால் ஜான் குமாரின் பண பலத்திற்கு முன்பு சுப்பிரமணி ஜூஜுபி என்கிறார்கள்.

கோடீஸ்வரர்
காரணம், ஜான் குமார் பல கோடிகளில் புரள்பவர். பெரும் தொழிலதிபர். அதை விட முக்கியமாக அனைவரையும் அரவணைத்துச் செல்லக் கூடியவரும் கூட. எனவே அவருக்கே சீட் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். மொத்தத்தில் புதுச்சேரி யாருக்கு போகப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications