Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆதவ் அர்ஜுனா மைத்துநர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு ரூ 328 கோடி சொத்தா? வியக்க வைக்கும் வேட்புமனு!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனரும், லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு ரூ 328 கோடி சொத்து இருப்பதாக அவரது வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரிடம் இருக்கும் வாட்ச்களின் மதிப்பை கேட்டாலே தலை சுத்துகிறதே!

லாட்டரி மார்ட்டினின் மூத்த மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். இவர் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் மைத்துநராவார். அதாவது ஜோஸின் சகோதரியை ஆதவ் மணந்து கொண்டுள்ளார்.

jose Charles martin

ஜோஸ் மார்ட்டின் குரூப் நிறுவனங்களின் மேலாண் இயக்குநராகவும் இருந்து வருகிறார். ரியல் எஸ்டேட், விருந்தோம்பல், ஜவுளி, மென்பொருள் என பல துறைகளில் தனது வணிகத்தை விரிவுபடுத்தியுள்ள இவர், நவீனத் தொழில்நுட்பங்களைச் செயல்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர். குறிப்பாக, மார்ட்டின் அறக்கட்டளை மூலம் கல்வி மற்றும் சமூக நலப் பணிகளிலும் ஈடுபாடு காட்டி வருகிறார்.

இவர் புதுவையில் லட்சிய ஜனநாயக கட்சி என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இந்த கட்சியில் தவெகவில் இருந்த தாடி பாலாஜி, முக்கிய பொறுப்பு வகிக்கிறார். என்டிஏ கூட்டணியில் லட்சிய ஜனநாயக கூட்டணிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

30 தொகுதிகளை கொண்ட புதுவை சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில் புதுவையில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிந்தது. லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் அவரது சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரிடம் ரூ 328 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகளும், ரூ.269 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன. அவரது மனைவி சிந்து ஸ்ரீசார்லஸிடம் ரூ.10.61 கோடி அசையும் சொத்துகளும், ரூ.60 லட்சம் அசையா சொத்துகளும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சார்லஸ் வசம் ரூ.25.67 கோடி மதிப்புள்ள 17,525 கிராம் தங்கம், ரூ.44.87 கோடி மதிப்புள்ள 1,950.353 கேரட் வைரங்கள், ரூ.3.77 கோடி மதிப்புள்ள 134.98 கிலோ வெள்ளி, ரூ.38.53 கோடி மதிப்புள்ள வாட்சுகள், ரூ.1.57 லட்சம் மதிப்பிலான முத்துக்கள் ஆகியவை உள்ளன.

மனைவி சிந்து ஸ்ரீசார்லஸிடம் ரூ.5.35 கோடி மதிப்பிலான 3,655 கிராம் தங்கம், ரூ.2.10 கோடி மதிப்புள்ள 485.5 கேரட் வைரங்கள், ரூ.1.68 கோடி மதிப்புள்ள 60 கிலோ வெள்ளி, ரூ.1.14 கோடி மதிப்புள்ள வாட்சுகள் இருக்கின்றன. ரொக்கமாக சார்லஸ் ரூ.20.59 லட்சமும், மனைவி ₹1.82 லட்சமும் வைத்துள்ளனர். ரூ.66.15 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் மற்றும் ரூ.1.29 கோடி மதிப்புள்ள டோயோட்டா வெல்ஃபயர் கார்கள் உள்ளன.

சார்லஸின் அசையா சொத்துகளின் மொத்த மதிப்பில், சொந்தமாக வாங்கியது ரூ.102 கோடியும், பரம்பரையாக வந்தவை ரூ.167 கோடியும் அடங்கும். இதில் ரூ.192 கோடி மதிப்பிலான விவசாயம் அல்லாத நிலமும், ரூ.269 கோடி மதிப்பிலான குடியிருப்பு கட்டடங்களும் உள்ளன. மேலும், ரூ.1.95 கோடி டிடிஎஸ் உரிமைக்கோரலில் நிலுவையில் உள்ளது.

நிதி முதலீடுகளைப் பொறுத்தவரை, ஜோஸ் சார்லஸ் பல்வேறு வங்கி வைப்புநிதிகளில் ரூ.200 கோடியும், பங்குகளாக ரூ.14.28 கோடியும், அட்வான்ஸ்களாக ரூ.195 கோடியும் முதலீடு செய்துள்ளார். அவரது மனைவிக்கு ரூ.3.43 லட்சம் வைப்புநிதி, ரூ.3.6 லட்சம் பங்குகள், ரூ.24.2 லட்சம் அட்வான்ஸ்கள் உள்ளன. கடந்த நிதியாண்டில், சார்லஸுக்கு ரூ.59.37 கோடியும், மனைவிக்கு ரூ.16.63 லட்சமும் வருவாய் கிடைத்தது.

மொத்தம் ரூ.210 கோடி கடன் சுமை கொண்ட சார்லஸ் மீது ரூ.19.45 கோடி சொத்துக் கடனும், ரூ.1.28 கோடி கார் கடனும் உள்ளன. உள்ளூர் வங்கியில் ரூ.5.91 லட்சமும், வெளிநாட்டு வங்கியில் ரூ.1.03 கோடியும் கிரெடிட் கார்டு கடன்களாக நிலுவையில் உள்ளன.

இந்த பிரம்மாண்டமான சொத்துகளுக்கு மத்தியில், ஜோஸ் சார்லஸ் மூன்று குற்றவியல் வழக்குகளையும் எதிர்கொள்கிறார். சட்டவிரோத நிதிகளைப் பிணையற்ற கடன்களாகக் காட்டி, குற்றச் செயல் மூலம் ஈட்டப்பட்ட வருவாயில் சொத்து வாங்கியதாக அமலாக்க இயக்குநரகம் தொடர்ந்த வழக்கு என்ஐஏ எர்ணாக்குளம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

மேலும், பணமோசடி, சட்டவிரோதப் பணத்தைப் பெற்று அதன் மூலம் அசையா சொத்துகளில் முதலீடு செய்தல் தொடர்பான ஒரு வழக்கு டெல்லி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் லாட்டரி சீட்டுகள் தொடர்பான மூன்று குற்றவியல் வழக்குகளும் அவர் மீது நிலுவையில் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+