கோர்ட் தீர்ப்பை ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்... புதுச்சேரி நல்லா இருக்கட்டும்.. கிரண்பேடி

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: ஆளுநருக்கான அதிகாரம் குறித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழங்கியுள்ள தீர்ப்பை ஆராய்ந்து வருவதாகவும், புதுச்சேரி நன்றாக இருக்க வாழ்த்துவதாகவும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் ஆவணங்களை கேட்க துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்ற மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

Kiran Bedi blesses Puducherry and its people

தீர்ப்பு குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஆய்வு செய்து வருகின்றோம். அதன் பின்னரே இவ்விகாரத்தில் மேல்நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.

மேலும் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. வழக்கம்போல் ஆளுநர் மாளிகைக்கு வரும் கோப்புகளை ஆய்வு செய்து அனுமதி அளிக்கப்படுகின்றது. புதுச்சேரி நன்றாக இருக்க நான் வாழ்த்துகின்றேன்.

Kiran Bedi blesses Puducherry and its people

புதுச்சேரி மக்கள் சிறந்தவர்கள். யூனியன் பிரதேசத்தில் நேர்மை, பொறுப்புடன் நிதி மேலாண்மையை கையாள்வதில் கவனமாக இருக்க வேண்டும். புதுச்சேரியிலுள்ள அனைத்து மக்களும் விரைவான முடிவுகளை எடுக்கும் ஆளுமை கொண்டவர்கள் என கிரண்பேடி கருத்து பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+