ஓம் என்றால் என்ன?.. சற்றும் சளைக்காமல்.. கிரண் பேடி இன்னொரு டிவீட்!
சென்னை: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி விடுவதாக இல்லை. தான் போட்ட சூரியனின் சத்தம் குறித்த டிவீட்டுக்கு கேலி கிண்டல்கள் குவிந்தபோதிலும் அதற்கும் ஒரு வித்தியாசமான விளக்கத்தைக் கொடுத்து மிரள விட்டுள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தனது டிவிட்டரில் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அது பெரும் சர்ச்சையானது. கேலி கிண்டல்களும் குவி்தன.
சூரியனிடமிருந்து வரும் சத்தம் ஓம் என்ற முழக்கத்தில் இருப்பதாக யாரோ ஒருவர் போட்ட டுபாக்கூர் வீடியோவை எடுத்து இவர் டடிவீட் போட்டிருந்தார். கிரண் பேடியே இப்படிப் போடலாமா என்று பலரும் வந்து கேலி செய்யப் போக நேற்று முழுவதும் கிரண் பேடி தலைதான் உருட்டி எடுக்கப்பட்டது.

கிரண் பேடி கண்டுக்கலையே
கேலி கிண்டல்கள் குவிந்தாலும் கூட அதை கிரண் பேடி கண்டுக்கவே இல்லை. டிவீட்டையும் எடுக்கவில்லை. மாறாக நேற்று முழுவதும் கம்மென்று இருந்து விட்டார். இந்த நிலையில் தற்போது இன்னொரு டிவீட் போட்டுள்ளார். அதில் தான் போட்ட கருத்தை நியாயப்படுத்துவது போல விளக்கம் கொடுத்துள்ளார். அதுதான் செம காமெடியாக உள்ளது.
|
இதுதான் உண்மை
புதிதாக போட்டுள்ள டிவீட்டில் ஏற்கிறோமோ இல்லையோ, இரு வேறு கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன என்று அதில் போட்டுள்ள கிரண் பேடி கூடவே ஓம் என்றால் என்ன என்ற விளக்கப் படத்தையும் பதிவிட்டுள்ளார். அதில் ஓம் என்ற மந்திரத்திற்கு என்ன அர்த்தம் என்று விலாவாரியாக விளக்கப்பட்டுள்ளது. அதாவது ஓம் என்று தான் சொன்னது சரியே என்பதை மறைமுகமாக வலியுறுத்தியுள்ளார் கிரண் பேடி.
|
சுவத்திலதான் முட்டிக்கணும்
இதற்கும் எதிர் வினைகள் கிளம்பி விட்டன. உங்களது கருத்தைப் பார்த்தால் உங்களுக்கு அறிவியல் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் தனது தலையை
கொண்டு போய் சுவரில்தான் முட்ட வேண்டும் என்று ஒருவர் கூறியுள்ளார்.
|
உங்களை அன் பாலோ செய்கிறேன்
இன்னொருவரோ, மேடம் நீங்க, எப்படி யுபிஎஸ்சி தேர்வில் பாஸ் செய்தீர்கள் என்று எனக்கு சந்தேகமாக உள்ளது. ஐபிஎஸ் என்ற கெளரவத்தையே கேலிக்கூத்தாக்கி விட்டீர்கள். உங்களை அன் பாலோ செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
|
அட ஆரம்பமே ஓம் தானாம்
அதேசமயம், இதற்கு ஆதரவு தெரிவிப்போரும் குவிந்து வருகின்றனர். இந்த பிரபஞ்சத்தின் ஆரம்பமே ஓம்தான் என்று ஒருவர் ஒரே போடாக போட்டுள்ளார் பாருங்க. ஆக மொத்தத்தில், கிரண் போட்ட பதிவால் டிவிட்டர் உலகமே இரு வேறாக பிரிந்து களை கட்ட ஆரம்பித்து விட்டது.
சூரியனின் சத்தம் என்றால் என்ன.. புரிஞ்சவன் புரிஞ்சுக்கோ.. புரியாதவன் கிரண் பேடி கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ.. இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications