ஏன் பாட்டி போலீஸை விட்டு அப்பாவை மிரட்டறீங்க.. கிரண்பேடி பேத்தியின் பளீர் கேள்வி
Recommended Video

புதுச்சேரி: "கிரண் பாட்டி.. எங்க அம்மா-அப்பா பிரச்சனைக்கு நடுவுல நீங்க ஏன் வர்றீங்க.. எங்க அப்பாவை ஏன் இப்படி கஷ்டப்படுத்தறீங்க.. உங்கள பார்த்து நான் வெட்கப்படறேன்" என்று புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை அவரது சொந்த பேத்தியே கேள்வி எழுப்பி ஒரு வீடியோ போட்டுள்ளார்.
எப்போது புதுச்சேரிக்கு கிரண்பேடி ஆளுநராக வந்தாரோ, அன்றைய நாளில் இருந்தே அந்த யூனியன் பிரதேசத்தில் ஒரே பரபரப்புதான்!
திடீரென்று தொடப்பக்கட்டையை எடுத்து கொண்டு 'கிளீன் இந்தியா' என்பார், திடீரென அரசு அதிகாரிகளை கூப்பிட்டு எதுக்கு அரசு விழாவுக்கு இவ்ளோ செலவு பண்றீங்க என்று லெப்ட் & ரைட் வாங்குவார், திடீரென ஹெல்மெட் பிரச்சனையை எழுப்பி மாநிலத்தையே கதிகலங்க செய்வார். இதுபோக தினமும் முதல்வர் நாராயணசாமியுடன் உரண்டை இழுத்து மல்லுக்கட்டி வருவார்!
கிரண்பேடி
ஆனால் கிரண்பேடி வீட்டிலேயும் இப்படியேதான் தன் கெடுபிடியை காட்டியிருக்கிறார் போலும்! அவரது சொந்த பேத்தியே வீடியோ ஒன்றினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மொபைல் போனில் பேத்தியே இதனை பேசி ரெக்கார்ட் செய்துள்ளார். அந்த வீடியோவில், "நான் கிரண்பேடியின் ஒரே பேத்தி. கிரண் நாணி.. எங்க அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையில் எவ்வளவோ பிரச்சினைகள் வந்திருக்கு.

ஏன் கஷ்டப்படுத்தறீங்க?
அப்போதெல்லாம், 'உங்க பிரச்சினைகளுக்கு நடுவே வரமாட்டேன்' என்று சொன்னீங்களே நாணி. இப்போ மட்டும் ஏன் பாட்டி வர்றீங்க? போலீஸை வைத்து அப்பாவை ஏன் கஷ்டப்படுத்தறீங்க நாணி? என்னை யாரும் கடத்தவில்லை. இங்க பாருங்க.. நான் அப்பாகூட சந்தோஷமாதான் இருக்கேன்" என்று சொல்லி தனது தந்தையை அழைத்து காட்டுகிறார்.

வெட்கப்படறேன்
பிறகு மீண்டும் தொடர்ந்து பேத்தி, "பாத்தீங்களா நாணி.. நான் சந்தோஷமாதான் இருக்கேன்.. என் அம்மாவை நினைத்தும், பாட்டியை நினைத்தும் ரொம்பவே வெட்கப்படுறேன். என் அப்பாவுக்கு சப்போர்ட் செய்யணும்னு நினைக்கறவங்க இந்த வீடியோவில் உங்க கமென்ட்டை போடுங்க" என்று பேசியுள்ளார். புதுச்சேரி மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவிலும் இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.

கிரண்பேடி பதில்
இந்த வீடியோவிற்கு கீழே மற்றவர்கள் கருத்து போட்டார்களோ இல்லையோ,, கிரண்பேடியே உள்ளே புகுந்து கருத்து சொல்லி உள்ளார், "என் பேத்தி சொல்றதையெல்லாம் பெரிசா எடுத்துக்கிட்டு, இதற்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை. அவள் எப்பவுமே என் பேத்தி தான்.

மாந்திரீகம்
புருஷனின் மாந்திரீக செயல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் முழு உரிமை என் மகளுக்கு இருக்கிறது. என் பொண்ணை நான் எப்படி ஆதரிக்கிறேனோ அதே ஆதரவு அவளது மகளுக்கும் தேவைப்படுகிறது. இது தொடர்பான கேஸ் கோர்ட்டில நடந்துக்கிட்டிருக்கு. தீர்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்" என்றார், இந்த சின்னக் குழந்தை, கிரண் பேடியின் மகள் வயிற்றுப் பேத்தி ஆவார்.

யூடியூப்
மேலும், இந்த வீடியோ பதிவை நீக்குவதற்காக யூடியூப்புக்கு கிரண்பேடி தரப்பில் வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications