மலிவான விலையில் சரக்கு கிடைக்கும் என்ற 'மங்கா புகழை' பறிகொடுத்த புதுச்சேரி-ரேட் ரொம்ப காஸ்ட்லி மேன்!
புதுவை: கொரோனா லாக்டவுனால் புதுச்சேரிக்கு இருந்த ஒரே ஒரு பெருமையும் பறிபோய்விட்டது.. மதுபான வகைகள் மிக குறைவான விலையில் கிடைக்கும் என்கிற நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
Recommended Video
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட லாக்டவுனால் மதுபான கடைகள் மூடப்பட்டன. ஏப்ரல் 20-ந் தேதிக்குப் பிறகு லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

விலை உயர்வு
இதனால் மீண்டும் மதுபான கடைகளும் திறக்கப்பட்டன. ஆனால் பல மாநிலங்களில் மதுபான விலைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டன. இதனையும் பொருட்படுத்தாமல் குடிமகன்கள் வாங்கி செல்கின்றனர். தமிழகத்திலும் கணிசமான அளவு மதுபானவிலை உயர்த்தப்பட்டது.

புதுவையில் தொடர் மூடல்
ஒட்டுமொத்த நாட்டிலும் மதுபான கடைகள் திறகப்பட்ட நிலையில் மதுவகைகளுக்கு பெயர் பெற்ற புதுவையில் கடைகள் திறக்கப்படவில்லை. அதுவும் மாநில முதல்வர் மதுபான கடைகள் திறக்கப்படும் என அறிவித்தும் ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் போனதால் கடைகளை திறக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.

விலை உயர்த்த நெருக்கடி
புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் மதுபான விலைகள் குறைவாக இருக்கும். ஆனால் கொரோனாவுக்குப் பின்னர் மதுபான விலைகள் கடுமையாக உயர்த்தப்பட்டன. இதனால் தமிழகத்தைப் போல புதுவையிலும் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்பட வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தி வந்தார். இது தொடர்பாக ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே விவாதம் நடந்து வந்தது. இதனால் புதுவையில் கடைகள் திறப்பில் தாமதமானது.
கிடுகிடு உயர்வு
இந்நிலையில் புதுவையில் நாளை முதல் மதுபான கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாற்றி அமைக்கப்பட்ட மதுபானங்கள் விலைபட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. புதுவையில் இதுவரை விற்கப்பட்ட மதுபானங்கள் விலை இரண்டு முதல் 3 மடங்கு விலை உயர்ந்துள்ளது. அதாவது தமிழக விலைக்குத்தான் புதுவையிலும் விற்கப்படுகிறது. இதனால் குறைவான விலையில் மது கிடைக்கும் என்ற மங்கா புகழை இழந்துவிட்டது புதுச்சேரி- எல்லாம் கொரோனாவால்!
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications