திடீரென மயங்கி விழுந்த காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம்.. புதுச்சேரி பிரசாரத்தில் பரபரப்பு
புதுச்சேரி: புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் பிரசாரத்தின்போது திடீரென்று மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் 9 தொகுதிகள் + புதுச்சேரி என மொத்தம் 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு திமுக வழங்கி உள்ளது. கடந்த 2019 லோக்சபா தேர்தலிலும் புதுச்சேரி தொகுதியை திமுக, காங்கிரஸ் கட்சிக்கு விட்டு கொடுத்தது. அந்த தேர்தலில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தற்போது சிட்டிங் எம்பியாக உள்ள வைத்திலிங்கம் மீண்டும் காங்கிரஸ் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜகவில் புதுச்சேரி பாஜக அமைச்சர் நமச்சிவாயம், அதிமுகவின் ஜி தமிழ் வேந்தன் நாம் தமிழர் கட்சியின் ஆர் மேனகா உள்ளிட்டவர்கள் போட்டியிடுகின்றனர்.
இவர்களின் வேட்புமனுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மீண்டும் வெல்லும் முனைப்பில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் புதுச்சேரியில் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தான் இன்று மதியம் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் தனது கட்சியினருடன் புதுச்சேரி ஜீவா நகர் பகுதியில் திறந்த வாகனத்தில் பிரசாரம் செய்தார்.
அப்போது மிகவும் சோர்வாக காணப்பட்ட வைத்திலிங்கம் திடீரென்று மயங்கி விழுந்தார். பிரசாரம் செய்த வாகனத்திலேயே அவர் மயங்கி விழுந்த நிலையில் அருகே இருந்த நிர்வாகிகள் தாங்கி பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து நிர்வாகிகள் வைத்திலிங்கத்தை மீட்டு அருகே உள்ள வீட்டில் அமர வைத்தனர். தண்ணீர் வழங்கப்பட்டது. 15 நிமிடங்கள் வரை ஓய்வெடுத்த வைத்திலிங்கம் மீண்டும் பிரசாரத்துக்கு புறப்பட்டு சென்றார். மதிய அதிகமான வெயில் இருந்த நிலையில் அவர் மயங்கி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications