தமிழிசைக்கு பறந்த ஆடியோ.. மலேசிய பெண் எம்எல்ஏவிற்கு "சில்மிஷ மெசேஜ்".. சிக்கும் பாஜக நிர்வாகி?
புதுச்சேரி: மலேசியாவை சேர்ந்த சட்டசபை உறுப்பினர் ஒருவருக்கு பாஜக நிர்வாகி ஒருவர் பாலியல் ரீதியாக மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
மலேசியாவில் பகாங் மாநிலத்தில் சட்டசபை உறுப்பினராக இருப்பவர் தமிழச்சி காமாட்சி துரைராஜூ. மலேசியாவில் வசிக்க கூடிய தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பகாங் மாநிலத்தில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளில் தமிழச்சி காமாட்சி துரைராஜூ முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் புதுச்சேரியை சேர்ந்த நபர் வெற்றிவேல் பிரகாஷ் தமிழச்சி காமாட்சி துரைராஜூக்கு பாலியல் ரீதியாக பேஸ்புக்கில் மெசேஜ் அனுப்பி உள்ளார். முதலில் தமிழச்சி காமாட்சி துரைராஜூவை பாராட்டி நட்பு ரீதியாக வெற்றிவேல் மெசேஜ் அனுப்பி உள்ளார். இதற்கு தமிழச்சி காமாட்சி துரைராஜூ நன்றி தெரிவித்துவிட்டு கடந்து உள்ளார். ஆனால் அதோடு நிற்காமல் அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக ஆபாசமாக மெசேஜ் செய்துள்ளார்.

தமிழச்சி காமாட்சி துரைராஜூ
இந்த மெசேஜ்களை தமிழச்சி காமாட்சி துரைராஜூ முதலில் கவனிக்கவில்லை. நேற்று பிரகாஸ் அனுப்பிய மெசேஜ்களை திறந்து தமிழச்சி காமாட்சி துரைராஜூ பார்த்துள்ளார். பார்த்தவருக்கு பெரிய அதிர்ச்சி.. முழுக்க முழுக்க ஆபாசமாக நிறைய மெசேஜ்களை பிரகாஷ் அனுப்பி வந்துள்ளார். பாலியல் ரீதியாக தவறான விஷயங்களை பேசி பிரகாஷ் தமிழச்சி காமாட்சி துரைராஜூக்கு மெசேஜ் செய்து இருக்கிறார்.

தமிழிசை
அதோடு உன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டாவில் போட்டு மோசமாக வர்ணிப்பேன் என்றும் மிரட்டி உள்ளார். அதோடு தமிழச்சி காமாட்சி துரைராஜூவை மோசமாக வர்ணனை செய்துள்ளார். இதையடுத்து எம்எல்ஏ தமிழச்சி காமாட்சி துரைராஜூ, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசைக்கு இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். ஆடியோ மூலம் தமிழச்சி காமாட்சி துரைராஜூ தமிழிசையிடம் புகார் அளித்து இருக்கிறார்.

ஆடியோ புகார்
அதில், ஒரு மலேசிய எம்எல்ஏ எனக்கே இந்த நிலை என்றால் அங்கு இருக்கும் பெண்களின் நிலை குறித்து அச்சம் எழுகிறது. எனக்கு புதுச்சேரியை சேர்ந்த வெற்றிவேல் பிரகாஷ் என்பவர் பாலியல் ரீதியாக மெசேஜ் செய்கிறார். என்னை மிரட்டுகிறார் . அவரின் பேஸ்புக் பக்கத்தை பார்த்தால் அவர் பாஜகவை சேர்ந்தவர் போல தெரிகிறது. அதனால் உங்களிடம் அவர் பற்றி புகார் அளிக்கிறேன்.

தமிழச்சி காமாட்சி துரைராஜூ பாஜக
நீங்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலில் பெண்கள் இருப்பதும், சாதிப்பதும் மிகவும் கடினம். நீங்களும், நானும் பல சவால்களை கடந்து இந்த இடத்திற்கு வந்துள்ளோம். நம்மை போன்ற பெண்களுக்கு இது போன்ற ஆண்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். இதை கவனத்தில் கொண்டு வெற்றிவேல் பிரகாஷ் மீது உடனடியாக நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆடியோ மூலம் தமிழச்சி காமாட்சி துரைராஜூ தமிழிசையிடம் புகார் அளித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications