கட்சியை காப்பாற்ற வா தலைவா.. எம்ஜிஆர் சிலையை கட்டி பிடித்து கண்ணீர் விட்ட சுசீந்திரன்- வீடியோ
புதுக்கோட்டை: அதிமுகவை காப்பாற்ற எம்ஜிஆர் சிலையை கட்டிப் பிடித்து தொண்டர் ஒருவர் கண்ணீர் விட்ட காட்சிகள் வைரலாகின.
Recommended Video
அதிமுகவில் ஒற்றை தலைமையா அல்லது இரட்டை தலைமையா என்ற விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியிலும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு கடந்த 7 ஆண்டுகளாக தினமும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வரும் அதிமுக தொண்டர் சுசீந்திரன், வழக்கம் போல் இன்று காலையும் மாலை அணிவித்தார்.

எம்ஜிஆர் சிலை
அப்போது எம்ஜிஆர் சிலையை கட்டிப் பிடித்து கட்சியை காப்பாற்ற வா தலைவா என கண்ணீர் விட்டு அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒன்றரை கோடி தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ, அதன்படி ஒன்றுபட்ட இயக்கமாய் மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கக் கூடிய வகையில் அதிமுக வளம் பெற வேண்டும்.

பொதுக் குழு
பொதுக் குழுவில் என்ன முடிவு எட்டப்படுகிறதோ அதற்கு தலைவர்கள் கட்டுப்பட்டு, தொண்டர்களின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும். கட்சியின் முடிவை தொண்டர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். எம்ஜிஆர், ஜெயலலிதா மீதுள்ள பற்றால் மாற்றுக் கட்சிகளுக்கு செல்ல மனமில்லாமல் ஏராளமான தொண்டர்கள் கனத்த இதயத்துடன் அதிமுகவில் நீடித்து வருகிறார்கள்.

எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட கட்சி
எம்ஜிஆர் கஷ்டப்பட்டு தொடங்கிய கட்சி, ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட இந்த கட்சி இப்படி பாழாகிறதே என்ற வேதனையும் விரக்தியும் ஒவ்வொரு தொண்டர்களின் மனதிலும் எழுந்துள்ளது. இதையே சசிகலாவும் ஒவ்வொரு பேட்டியிலும் கூறி தனது வேதனையை தெரிவிப்பார்.

ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட கட்சி
அந்த வகையில் ஜெயலலிதா இருந்த வரை ராணுவ கட்டுக்கோப்பாக இருந்த இந்த இயக்கத்தில் தற்போது அடிதடி வரை சென்றுவிட்டதே என்ற ஆதங்கம் உண்மையான தொண்டர்களுக்கு உள்ளது. 100 ஆண்டுகளுக்கு அதிமுக செழித்தோங்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் ஆசை நிறைவேறுமா என்ற கேள்விகளுடன் தொண்டர்கள் குமுறுகிறார்கள்.
-
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications