எங்க ஊருக்கே அனுப்பிடுங்க.. புண்ணியமா போகும்.. புதுச்சேரியில் வெளிமாநில தொழிலாளர்கள் முற்றுகை

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: 4 வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பை தொடர்ந்து, புதுச்சேரியிலிருந்து சொந்த ஊருக்கு திரும்ப ஒரே நேரத்தில் ஏராளமான வெளி மாநிலத்தவர் இ-பாஸ் கேட்டு பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24 ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து 3 வது முறையாக வரும் 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Migrant workers hold protest in Puducherry

இதன் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்கிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் மாநிலத்துக்கு செல்லலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

புதுச்சேரி அரசும் தனியாக http://welcomeback.py.gov.in இணையதளம் தொடங்கி அவர்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. ஊரடங்கு காரணமாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தது.

தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டு தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. அதிலும் குறைந்த அளவிலான தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Migrant workers hold protest in Puducherry

இதனால் வெளி மாநிலத்தில் இருந்து வந்து பணிபுரிந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. எனவே அவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, 4 வது முறை ஊரடங்கு நீட்டிகப்படும் என அறிவித்த நிலையில், புதுச்சேரி தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்த வெளிமாநில தொழிலாளர்கள் 150 க்கும் மேற்பட்டோர் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவதற்காக இ-பாஸ் பெறுவதற்கு ஒரே நேரத்தில் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்.

அங்கு இ-பாஸ் பெற பலமணிநேரம் அவர்கள் காத்திருந்தனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் கேட்டபோது, கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு இங்கிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதே போல் இவர்களையும் அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+