Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அன்னபூரணி"யில் தொடங்கி புதிய அவதாரத்தில் புதுவை அமைச்சரின் மகளிர் தின ஸ்பெஷல்.. சான்ஸே இல்ல!

Subscribe to Oneindia Tamil

புதுவை: மகளிர் தினத்தையொட்டி அம்மன் அவதாரத்தில் புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா வீடியோ காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

Recommended Video

    அன்னபூரணியில் தொடங்கி புதிய அவதாரத்தில் புதுவை அமைச்சரின் மகளிர் தின ஸ்பெஷல்.. சான்ஸே இல்ல!

    புதுச்சேரி மாநிலம் போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் சந்திர பிரியங்கா. இவர் முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகளாவார்.

    புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பெண் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

    விழிப்புணர்வு குறும்படம்

    விழிப்புணர்வு குறும்படம்

    ஏற்கனவே இவர் விழிப்புணர்வு குறும்படத்திலும் நடித்துள்ளார். தனது உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் நடனம் ஆடிய வீடியோவும் சமூகவலைதளங்களில் டிரென்டானது. நேற்று உலக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அமைச்சர் சந்திர பிரியங்கா அம்மன் அவதாரம் பூண்டார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    ஆரத்தி எடுத்த பெண்கள்

    ஆரத்தி எடுத்த பெண்கள்

    இந்நிலையில் அமைச்சர் சந்திரபிரியங்கா ஆரத்தி எடுத்து வரவேற்கும் பெண்கள். அவருக்கு மேக்கப் செய்துஅம்மன் அவதாரத்தில் அலங்கரிக்கின்றனர். பின்னர் அவர் அம்மன் போல அமர்ந்து அருள்பாலிப்பது போல வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கணவர் சண்முகத்துடன் பூஜையில் கலந்து கொள்ளும் இவர் அம்மனாக தோன்றினார்.

    ஆன்மீகம் முதல் அறிவியல்

    ஆன்மீகம் முதல் அறிவியல்

    பின்னணியில் ஆன்மீகம் முதல் அறிவியல் வரை தடம் பதிக்கும் இடமெல்லாம் தரணி போன்று வாழ்பவள் பெண். பெண் என்பவள் பிரம்மசக்தி என்று தொடங்கி பெண்ணின் பெருமையை பறைச்சாற்றும் வகையில் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இறுதியில் அனுதினமும் நம்மை காத்திடும் பெண்களை சர்வதேச மகளிர் தினத்தில் போற்றி வணங்குவோம் என முடிகிறது.

    1 நிமிடம் 20 வினாடி

    1 நிமிடம் 20 வினாடி

    அந்த வீடியோவில் கால அளவு ஒரு நிமிடம் 20 வினாடிகளாகும். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் டிரென்ட்டாகி வருகிறது. செங்கல்பட்டு அன்னபூரணி சாதாரண உடையில் பூத்தூவ வைத்தது போல் அமைச்சரும் வீடியோவில் பூத்தூவ வைப்பது , ஆரத்தி ஒற்றி கொள்வது என இருந்து கடைசியில் ஒரு கையில் கிளி மறுகையில் கரும்புடன் அம்பாளின் அவதாரமாகவே காட்சியளிக்கிறார். சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு புதுவை அமைச்சரவையில் பெண் ஒருவர் தற்போதுதான் இடம்பெற்றுள்ளார். பெண்கள் முன்னேற்றம் சார்ந்து அவ்வப்போது ஏதேனும் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+