“வீடியோவை பிரஸ்க்கு கொடுத்துட்டாங்க”: புதிய மனு தாக்கல் செய்த அமைச்சர் மரிய வில்சன்.. கோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி நீதிமன்றத்தில் தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று ஆஜராகவில்லை. அதேசமயம், அவரது தரப்பில் புதிய மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணை செப்.11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022 ஆம் ஆண்டு ஆக.8 ஆம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குளோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குளோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

Marie wilson

புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் பெற ஆஜராக உத்தரவிட்ட போதும், அமைச்சர் மரிய வில்சன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார்.

புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவதில் விலக்கு அளிக்கவும், ரத்து செய்ய கோரியும் மரிய வில்சன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், மரிய வில்சனின் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், புதுச்சேரி நீதிமன்றத்தில் அவர் ஆஜராக உத்தரவிட்டது.

மேலும், மரிய வில்சனின் மனுவுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, மரிய வில்சன் நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது என்று கூற முடியாது என்றும், நிதி அமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல என்றும் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த போது கூட நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார் என்றும் சுட்டிக்காட்டி இருந்தார்.

அதையடுத்து இந்த வழக்கில் கடந்த 4 ஆம் தேதி தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிக்கையை பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து, வழக்கு விசாரணை இன்றைய தினத்துக்கு புதுச்சேரி நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதன்படி, வழக்கு விசாரணை நீதிபதி சந்திரசேகர் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

மேலும், லாஸ்பேட்டை போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் தனக்கு எதிரான சட்டப் பிரிவுகளில் இருந்து விடுவிக்கக் கோரி அமைச்சர் மரிய வில்சன் தரப்பு வழக்கறிஞர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதற்கான பதில் மனு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து, தாக்குதல் நடந்த சம்பவம் தொடர்பாக வீடியோவை ஊடகங்களுக்கு அளித்துவிட்டதாகக் கூறி சகோதரர் மனைவி மீது நீதிமன்ற அவமதிப்பு மனுவை தமிழக அமைச்சர் மரிய வில்சன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வராது என்று அமைச்சரின் சகோதரர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்களின் வாதங்களை முன்வைத்தனர். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த இரு மனுக்கள் தொடர்பான வழக்கு விசாரணையை வரும் செப்.11 ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+