மாடல் அழகி சான் ரேச்சல் 50 மாத்திரைகளை விழுங்கி தற்கொலை.. கணவர், மாமியார் காரணம் இல்லை என கடிதம்?
புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருப்பழகி பிரிவில் உலக அழகி பட்டம் வென்றவர் சான் ரேச்சல். இந்நிலையில் அவர் அதிக அளவு மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் எழுதிய கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாடலிங்கில் அசத்தி வந்த சங்கரபிரியா என்கிற சான் ரேச்சல், புதுச்சேரி காராமணிகுப்பத்தில் உள்ள தனது வீட்டில் அதிக அளவு ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி சான் ரேச்சல் (25). சான் ரேச்சல், கருப்பழகி பிரிவில் உலக அழகி பட்டம் வென்றவர். ஃபேஷன் ஷோக்கள், விளம்பரங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியதன் மூலம் பிரபலமானவர்.
சான் ரேச்சல் காராமணிகுப்பத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்ப பிரச்சனை காரணமாக அவர், மன உளைச்சலால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
50 ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்ட அவர், ஜூன் 5 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுநீரகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட உயர் சிகிச்சையாக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உருளையன்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சான் ரேச்சல் பல்வேறு பேஷன் நிகழ்ச்சிகள் நடத்த கடன் பெற்றதாகவும், அதனால் கடும் மன உளைச்சளில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், தனது மரணத்துக்கு தனது கணவரோ, மாமியாரோ, காரணம் இல்லை என அவர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருப்பு நிறம் என பலர் சான் ரேச்சலை ஒதுக்கிய நிலையில் விடா முயற்சியால் மிஸ் பாண்டிச்சேரி 2020-2021, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019, மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் 2019 என பல டைட்டில்களை ஜெயித்து மாடலிங்கில் கலக்கினார். எந்த நிறத்தை வைத்து பிறரால் அவமானங்களையும், புறக்கணிப்புகளையும் சந்தித்தாரோ அதையே வைத்து சாதித்துக் காட்டியவர் ரேச்சல்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications