சாலையோரம் உறங்கிய கூலித்தொழிலாளி.. தலையில் கல்லைப் போட்டு கொலை!
புதுச்சேரி: புதுச்சேரி அருகே குடிபோதையில் சாலையோரம் உறங்கிய கூலித் தொழிலாளியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.
Recommended Video
புதுச்சேரி அடுத்த கன்னியகோவில் பகுதியில் உள்ள மண்ணாதீஸ்வரர் கோவில் அருகே இன்று காலை சுமார் 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் தலையில், கல்லை போட்டு கொலை செய்யபட்ட நிலையில் கிடந்தார். இதனையடுத்து கொலை சம்பவம் தொடர்பாக கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் கடலூர் மாவட்டம் வன்னியர்பாளைம் பகுதியை சேர்ந்த டேனியல்(52) என்ற கூலித் தொழிலாளி என்பதும், மது அருந்தும் பழக்கும் உள்ளது எனபதும் தெரியவந்தது.


கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த கிருமாம்பாக்கம் போலீசார், கொலை நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த டேனியலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் எழுப்பி வாக்குவாத்தில் ஈடுபட்டு, பின்னர் டேனியல் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது பதிவாகியிருந்தது. சிசிடிவி காட்சிகளை கொண்டு டேனியலை கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

அண்மை காலமாக புதுச்சேரியில் கொலை சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. இதனால் புதுச்சேரி மக்களும், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே போலீசார் இரவு நேரங்களில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமென்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications