புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதுவையில் கெத்து காட்டிய பாஜக.. பாஜகவின் நமச்சிவாயம், ஜான்குமார் அதிரடி வெற்றி!

Google Oneindia Tamil News

புதுச்சேரி: . புதுவையில் தற்போது வரை மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி 8 இடங்களில் முன்னணியும் 3 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களில் முன்னிலையும் 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

சமீபத்தில் புதுவை காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்த பாஜவின் நமச்சிவாயம் மண்ணாடிபட்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பாஜகவுக்கு கிடைத்த திடீர் சந்தோஷம்.. கை தூக்கி விட்ட தபால் ஓட்டுக்கள்.. அதிமுக கூடுதல் பலம்!பாஜகவுக்கு கிடைத்த திடீர் சந்தோஷம்.. கை தூக்கி விட்ட தபால் ஓட்டுக்கள்.. அதிமுக கூடுதல் பலம்!

புதுவையில் தேர்தல்

புதுவையில் தேர்தல்

புதுவையை பொறுத்தவரை காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகியவை கூட்டணி அமைத்து மோதுகின்றன. எதிர்புறம் என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேறு ஒரு கூட்டணியாக மோதுகின்றன.

எத்தனை வேட்பாளர்கள்

எத்தனை வேட்பாளர்கள்

இதுதவிர மநீம, நாம் தமிழர், அமமுக, தேமுதிக மற்றும் சுயேட்சைகளும் போட்டியிட்டன. மொத்தம் 324 வேட்பாளர்கள் தேர்தலை களத்தில் உள்ளனர். இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தற்போது வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

 என்.ஆர். காங்கிரஸ் முன்னிலை

என்.ஆர். காங்கிரஸ் முன்னிலை

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தது. காங்கிரஸ் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்தது. தற்போது வரை மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி 8 இடங்களில் முன்னணியும் 3 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களில் முன்னிலையும் 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

 நமச்சிவாயம் வெற்றி

நமச்சிவாயம் வெற்றி

இந்த நிலையில் சமீபத்தில் புதுவை காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்த பாஜவின் நமச்சிவாயம் மண்ணாடிபட்டு தொகுதியில் போட்டியிட்டார். அங்கு அவர் வெற்றி பெற்றார். புதுவை காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஜான் குமார் வெற்றி பெற்றார். இதன் மூலம் புதுவையில் பாஜக 2 இடங்களில் இதுவரை வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

திமுக வெற்றி

திமுக வெற்றி

புதுச்சேரி கதிர்காமம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் வெற்றி பெற்றார். புதுவை உப்பளம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிபால் கென்னடி வெற்றி பெற்றார். புதுவையில் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

English summary
N.R. Congress alliance has won 8 seats and 3 seats in puducherry
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X