புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதுவையை தட்டி தூக்கிய என்.ஆர்.காங்கிரஸ்.. பாஜக விஸ்வரூப வெற்றி.. அனைத்திலும் அதிமுக தோல்வி!

Google Oneindia Tamil News

புதுவை: புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம் புதுவையில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.

Recommended Video

    #PuducherryElectionResults2021 தொடங்கியது வாக்கு எண்ணிக்கை: பரபர முன்னணி நிலவரம்!

    புதுவை மாநிலத்தில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குபதிவு ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற்றது.புதுவையை பொறுத்தவரை காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகியவை கூட்டணி அமைத்து மோதின

     "பெரிய சட்டை" ரங்கசாமி.. ஏனாமில் மயிரிழையில் தோற்று.. தட்டாஞ்சாவடியில் தப்பி கரை ஏறினார்!

    புதுவை வாக்கு எண்ணிக்கை

    புதுவை வாக்கு எண்ணிக்கை

    . எதிர்புறம் என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேறு ஒரு கூட்டணியாக களம் கண்டன. இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

    எத்தனை வேட்பாளர்கள்

    எத்தனை வேட்பாளர்கள்

    காலை முதலே என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தது. சமீபத்தில் புதுவை காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்த பாஜவின் நமச்சிவாயம் மண்ணாடிபட்டு தொகுதியில் போட்டியிட்டார். அங்கு அவர் வெற்றி பெற்றார். புதுவை காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஜான் குமார் வெற்றி பெற்றார். புதுச்சேரி கதிர்காமம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் வெற்றி பெற்றார். புதுவை உப்பளம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிபால் கென்னடி வெற்றி பெற்றார்.

    ரங்கசாமி அதிர்ச்சி தோல்வி

    ரங்கசாமி அதிர்ச்சி தோல்வி

    சுயேச்சை வேட்பாளரக்ள் பலரும் வெற்றி பெற்றனர். என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், புதுவை முன்னாள் முதல்வருமான என்.ஆர்.ரங்கசாமி புதுவையில் தட்டச்சாவடி, ஏனாம் தொகுதியில் தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் ஏனாம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவரிடம் என்.ஆர்.ரங்கசாமி அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

     என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி

    என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி

    புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் உள்ள அதிமுக போட்டியிட்ட 5 இடங்களிலும் தோல்வியை தழுவியது. புதுவையில் மொத்த நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் காங்கிரஸ் 2 இடங்களிலும் திமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சை கள் 5 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

    English summary
    N.R. The Congress alliance is leading in 11 seats. Congress is leading in only 4 seats
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X