தெய்வமே நீங்க எங்கயோ போயிட்டீங்க.. புதுச்சேரி காரைக்கால் டூ நாகை.. காரின் டேஸ்போர்டில் என்னப்பா அது?
புதுச்சேரி: இப்படி எல்லாம் மதுபானங்களை கடத்தி வர முடியுமா என்று நீங்களே உங்களை கேள்வி கேட்கும் அளவிற்கு ஒரு சம்பவத்தை புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து காரில் வந்தவர்கள் செய்திருக்கிறார்கள். காரின் டேஸ் போர்டில் 400 மது பாட்டில்கள் கடத்திய பெண் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக ஊடங்களில் வேகமாக பரவி வருகிறது.
தமிழகம், புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், மதுபானம் ஆகியவற்றை கொடுப்பதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகளும், போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

பொதுவாக புதுச்சேரி மாநிலத்தில் மதுபானங்கள் விலை குறைவு.. அங்கு குறைந்த விலைக்கு மதுபானங்கள் வாங்கி தமிழ்நாட்டிற்கு கடத்துவது சாதாரண காலங்களிலேயே அடிக்கடி நடக்கும். தேர்தல் காலம் என்பதால் மிகவும் அதிகமாக உள்ளது. பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், மதுபானங்களை மொத்தமாக வாங்கி அரசு பேருந்து கார், லாரி, சரக்கு வாகனங்களில் கடத்த முயற்சி செய்கிறார்கள். சிலர் தலைசுமையாகவும் எல்லைகளில் கடத்தும் சம்பவங்களும் நடக்கிறது. இதையடுத்து புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் உள்ள தமிழக எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்..
இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை மாவட்டத்தை நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த கார் நாகை மாவட்டம் வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்காலில் இருந்து நாகப்பட்டினத்திற்கு காரிஷ் டேஸ் போர்டில் பதுக்கி வைத்து நூதன முறையில் கடத்தி வைத்திருந்த 400 மதுபாட்டில்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்திய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
இது ஒருபுறம் எனில் புதுச்சேரி-கடலூர் சாலையில் கிருமாம்பாக்கம் பகுதியிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் வாலிபர் ஒருவர் தான் வைத்திருந்த பையை கீழே போட்டு விட்டு தப்பியோடினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பையை சோதனை செய்தபோது 90 மி.லி. கொண்ட 78 மதுபாட்டில்கள் இருந்து. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கலால்துறையிடம் ஒப்படைத்தனர்.
கரையாம்புத்தூர் போலீசார் மணமேடு பெட்ரோல் பங்க் அருகே ரோந்து சென்றனர். அப்போது மர்மநபர் ஒருவர் 180 மி.லி. கொண்ட 50 சாராய பாக்கெட்டுகளை வீசிவிட்டு சென்றார். அதனை பறிமுதல் செய்த போலீசார் கலால்துறையிடம் ஒப்படைத்தார்கள். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications