கிரண் பேடி ஆணா பெண்ணா.. நேற்று நாஞ்சில் சம்பத்.. சூடு சொரணை இல்லாத அதிமுக.. இன்று நாராயணசாமி!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஜெ. பேச்சைக் காட்டி அதிமுகவினரை வறுத்தெடுத்த நாராயணசாமி-வீடியோ

    புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநரை நேற்று ஆணா பெண்ணா என்று கேட்டு காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த நாஞ்சில் சம்பத் கேட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று அதிமுகவினை சூடு சொரணை இல்லாதவர்கள் என்று முதல்வர் நாராயணசாமி கேட்டிருப்பது மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

    ஆவேசமாக பேசும்போது வார்த்தை தடுக்கும். இது சகஜமானதுதான். இதனால்தான் தலைவர்கள் நிதானமாக பேச முயற்சிப்பார்கள். கோபம் காட்டும்போது வார்த்தைகள் தாறுமாறாக வந்து விடும்.

    ஆனால் ஆவேசமாக பேசினாலும் நிதானமாகப் பேசக் கூடியவரான நாஞ்சில் சம்பத் நேற்று பேசும்போது புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியை ஆணா பெண்ணா என்று கூட தெரியவில்லை என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    தவளக்குப்பத்தில் பிரச்சாரம்

    தவளக்குப்பத்தில் பிரச்சாரம்

    திமுக - காங்கிரஸ் கூட்டணியில் புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் சபாநாயகர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து தவளக்குப்பம் கிராமத்தில் நாஞ்சில் சம்பத்தை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசும்போதுதான் ஆளுநரை அவர் கடுமையாக விமர்சித்தார்.

    கிரண் பேடி ஆணா பெண்ணா

    கிரண் பேடி ஆணா பெண்ணா

    கிரண்பேடி ஆணா? இல்லை பெண்ணா என்று தெரியவில்லை. புதுச்சேரியில் ஆளும் அரசின் செயல்பாடுகளை கிரண்பேடி தொடர்ந்து முடக்கி வருவதாக குற்றம்சாட்டினார் சம்பத் . அவரது இந்தப் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    நாராயணசாமி அதற்கும் மேல்

    நாராயணசாமி அதற்கும் மேல்

    இந்த நிலையில், அதிமுகவினரைப் பார்த்து சூடு சொரணை இல்லாதவர்கள் என கடுமையாக அவர் சாடியுள்ளார். இதனால் புதுச்சேரி அதிமுகவினர் கொந்தளித்துப் போயுள்ளனர். புதுச்சேரி மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கத்தினை மக்களவை தேர்தலில் வெற்றிபெறச் செய்வதற்காக திமுக சார்பில் உருளையன்பேட்டையிலுள்ள தனியார் மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    மோடி மீது பாய்ச்சல்

    மோடி மீது பாய்ச்சல்

    இந்த கூட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் நமச்சிவாயம், வேட்பாளர் வைத்திலிங்கம் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, நரேந்திர மோடி அரசு மத்தியில் பொறுப்பேற்றதிலிருந்து கடந்த 5 ஆண்டுகளில் எந்த ஒரு திட்டத்தினையும் புதுச்சேரிக்கு கொண்டுவரவில்லை.

    துரோகி

    துரோகி

    பிரதமர் மோடி புதுச்சேரியை புறக்கணிக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புதுச்சேரியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசியபோது என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கூட்டணி தர்மத்தை மதிக்காத ஒரு துரோகி என்று கூறினார்.

    சொரணை இல்லையா

    சொரணை இல்லையா

    ஜெயலலிதா துரோகி என்று கூறியவர்களுடனேயே இப்போது, அதிமுகவினர் தற்போது கூட்டணி வைத்துள்ளனர். நான் கேட்கிறேன், அதிமுகவினருக்கு சூடு, சொரனை இல்லையா என்று கடுமையாக கேட்டார். நாராயணசாமி பேச்சால் அதிமுகவினர் கொதிப்படைந்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+